மண்டலக் கல்வி நிறுவனம், மைசூரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டலக் கல்வி நிறுவனம், மைசூரு

மண்டலக் கல்வி நிறுவனம், மைசூரு (Regional Institute of Education, Mysore) என்பது மைசூரில் 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது.[1] இது தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் இதையும் தவிர்த்து நான்கு மண்டலக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.

  1. அஜ்மீர்
  2. போபால்
  3. ஷில்லாங்
  4. புவனேஸ்வர்

பணிகள்[தொகு]

  • பள்ளிக் கல்வியின் தரமேம்பாட்டிற்கு உதவுதல்
  • பணிமுன் பயிற்சி அளித்தல்
  • பணியிடைப் பயிற்சி அளித்தல்
  • ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
  • ஆசிரியர் கல்வியினை மேம்படுத்துதல்

இந்நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, லட்சத்தீவுகள் பகுதிகளுக்கென்று செயல்படுகிறது.

வழங்கப்படும் பணிமுன் பயிற்சிகள்[தொகு]

  1. கல்வியியல் இளைஞர் ( B.A.Ed) ஒருங்கிணைந்த படிப்பு
  2. கல்வியியல் நிறைஞர் (M.Ed)
  3. கல்வியியல் முனைவர் (Ph.D. Education)
  4. வழிகாட்டுதல் மற்றும் அறிவுரை பகர்தல் பட்டயப்படிப்பு

மேற்கோள்கள்[தொகு]

  1. "RIE Mysore - About". Regional Institute of Education, Mysore.

வெளியிணைப்புகள்[தொகு]