மங்கல இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மங்கல இசை

மங்கல இசை என்பது தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் நாகசுரம் மற்றும் தவில் கருவிகளுடன் வழங்கப்படும் இசையாகும். தமிழர் இல்லங்களிலும், தமிழர் சமூக வழிபாட்டிலும், கோயில் தெய்வ வழிபாடுகளிலும் இவ்விசை முக்கியப் பங்கு பெறுவதாலும், மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கியப் பங்கு பெறுவதாலும் இதனை மங்கல இசை என்பர். தமிழர் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா, புகுமனை புகுதல் போன்ற இல்லற நிகழ்ச்சிகளின் பொழுதும், சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், கோயில் வழிபாடுகளிலும் இவ்விசை விளங்குவதால் இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர். [1]

மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, சுபம் போன்ற பொருள்களில் கையாளப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. மங்கல இசை

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கல_இசை&oldid=3734979" இலிருந்து மீள்விக்கப்பட்டது