மகேந்திர குமார் ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திர குமார் ராய்
Mahendra Kumar Roy
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
இயலப்பைக்குரி மக்களவைத் தொகுதி
பதவியில்
2009-2014
முன்னையவர்மினாட்டி சென்
பின்னவர்பிச்சாய் சந்திர பர்மன்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2006-2009
முன்னையவர்இயோதீந்தரநாத் ராய்
பின்னவர்காகேசுவர் ராய்
தொகுதிஇராச்சு கஞ்சு சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 திசம்பர் 1955 ( 1955-12-31) (அகவை 68)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி(மார்க்சு)
துணைவர்திபா ராய்
தொழில்பள்ளி ஆசிரியர்

மகேந்திர குமார் ராய் (Mahendra Kumar Roy) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1955 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியாவின் 15 ஆவது மக்களவையில் உறுப்பினராக இருந்தார். இயல்பைகுரி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மறைந்த அரேந்திர குமார் ராய் மற்றும் மறைந்த நானிபாலா ராய் ஆகியோரின் மகனாக, இயல்பைகுரி மாவட்டத்தில் உள்ள கோரியாபாரா கிராமத்தில் இவர் பிறந்தார். இளங்கலை மற்றும் இளங்கல்வியியல் பாடங்களில் பட்டம் பெற்றார். முறையே இயல்பைகுரியில் இருந்த கல்லூரி மற்றும் பயிற்சி மையங்களில் இவர் படித்தார். [2]

கிராம அளவில் அரசியல் நடவடிக்கைகளை தொடங்கினார். 1978-1988 ஆம் ஆண்டில் கிராம பஞ்சாயத்தில் இருந்தார். 1993-1998 ஆம் ஆண்டில் பஞ்சாயத் சமிதி உறுப்பினராகவும், 1998-2003 ஆம் ஆண்டில் இயல்பைகுரி சில்லா பரிசத்தின் உறுப்பினராகவும் இருந்தார். [2] 2006 ஆம் ஆண்டில் இராச்கஞ்ச் சட்டப்பேரவை தொகுதியில் இருந்து மேற்கு வங்க சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mahendra Kumar Roy -Political Profile". Archived from the original on 23 October 2010.
  2. 2.0 2.1 "Detailed Profile: Shri Mahendra Kumar Roy". Government of India. பார்க்கப்பட்ட நாள் 2010-09-25."Detailed Profile: Shri Mahendra Kumar Roy". Government of India. Retrieved 25 September 2010.
  3. "21 - Rajganj (SC) Assembly Constituency". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2009-08-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_குமார்_ராய்&oldid=3874470" இலிருந்து மீள்விக்கப்பட்டது