மகேந்திரசிங் சர்வையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகேந்திரசிங் சர்வையா
Mahendrasinh Sarvaiya
குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2007–2012
முதலமைச்சர்நரேந்திர மோதி
முன்னையவர்மன்சுக் எல். மாண்டவியா
தொகுதிபாலிதானா
குசராத்து வீட்டுவசதி வாரியத் தலைவர்
பதவியில்
2017–2020
குசராத்து பாரதிய சனதா கட்சி துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
மாநிலத் தலைவர்.சி. ஆர் பாட்டீல்

மகேந்திரசிங் சர்வையா (Mahendrasinh Sarvaiya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவரது தந்தையின் பெயர் பராக்ரம்சிங் என்பதாகும். பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் குசராத்து மாநிலத்திலுள்ள பாலிதானா சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதன் 12 ஆவது சட்டமன்றத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[1] குசராத்து மாநிலத்தின் பாரதிய சனதா கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். குசராத்து வீட்டு வசதி வாரியத்தின் தலைவராகவும், பாரதிய சனதா கட்சியின் பவநகர் மாவட்டத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Gujarat Vidhan Sabha. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  2. "State Bearers – BJP | BJP Gujarat | Bharatiya janata Party".
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரசிங்_சர்வையா&oldid=3917751" இலிருந்து மீள்விக்கப்பட்டது