பொமெட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
TomTato 2014-06-25

வரலாறு[தொகு]

பொமேட்டோ முதன் முதலில் 1977 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பரவலாகத் தோன்றியது. தக்காளிச் செடியின் தரமானத் தண்டுப் பகுதியையும், உருளைக்கிழங்கின் தரமானத் தண்டுப் பகுதியையும் இணைத்து ஒட்டுக் கட்டிய பின் உருளைக்கிழங்கின் தண்டுப் பகுதியையும், தக்காளிச் செடியின் வேர்ப் பகுதியையும் கிள்ளி விட வேண்டும். மண்ணிற்கு மேல் தக்காளிச் செடியும் மண்ணின் கீழ் உருளைக்கிழங்கு செடியும் வளர ஆரம்பிக்கும். நட்ட 12 வாரங்களில் தக்காளி செடி அறுவடைக்குத் தயாராகும். தக்காளியின் அறுவடை முடிந்து இலைகள் காய்ந்து முதிர்ந்து உதிர்ந்த பின்பு உருளைக்கிழங்குகளை அறுவடை செய்யலாம்.

பயன்கள்[தொகு]

  1. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாககப்பட்ட இச்செடி அதிக மகசூலுக்கு வழிவகுக்கும்.
  2. குறைந்த இடத்தில் அதிக இலாபம்.
  3. நிலம், நீர், வேலையாட்கள் குறைந்த அளவில் போதுமானது.
  4. நச்சுயிகள், பூசணத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் திறன் கொண்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொமெட்டோ&oldid=3849596" இலிருந்து மீள்விக்கப்பட்டது