பொது நல வழக்கு, இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொது நல வழக்கு (Public interest litigation) இந்திய அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 32ன் படி, பொதுமக்களின் நலத்தை பாதிக்கும் விடயம் குறித்து, பாதிக்கப்பட்டவரோ அல்லது வேறு ஒரு தனி நபரோ அல்லது தொண்டு நிறுவனமோ மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதை குறிக்கும். சில நேரங்களில் பொதுமக்கள் உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் ஆவணங்களின் அடிப்படையில், உயர்நீதிமன்றமே தன்னிச்சையாக பொதுநல வழக்கு தொடர்ந்து பொதுநலத்தை காக்க இயலும்.[1][2]

எடுத்துகாட்டாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, பொது நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, கொத்தடிமை வேலை, ஆற்று மணல் திருட்டு, கல் குவாரியில் கல் திருட்டு, சாயப்பட்டறை கழிவு நீரை வடிகால்களில் வெளியேற்றுவது, குழந்தை தொழிலாளர்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு, தாழ்த்தப்பட்டோர் மீது - சக கிராமத்தார் செய்யும் கொடுமைகள் குறித்து பொதுநல வழக்குகள் தொடரலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "What Is Pil?". Archived from the original on 2018-11-16. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
  2. A guide to filing a Public Interest Litigation (PIL)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_நல_வழக்கு,_இந்தியா&oldid=3740137" இலிருந்து மீள்விக்கப்பட்டது