பேரங்காடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்வேறு பொருட்களையும் சேவைகளையும் ஒரு பெரிய இடத்தில் விற்பனை செய்யும் இடம் பேரங்காடி ஆகும். உடை, உணவு, மருந்து, தளபாடங்கள், இலத்திரனிய கருவிகள் என பல தரப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் இங்கு பெறலாம்.
பொதுவாக, தமிழில் பெரும் கடைகள் உடபட பல்வேறு கடைகளை கொண்டிருக்கும் இடத்தையே பேரங்காடி என்பர். சில இடங்களில் பெரும் கடைகளை அல்லது மாளிகைக்கடைகளை குறிக்கவும் பேரங்காடி பயன்படுத்தப்படுவதுண்டு.
பேரங்காடி 1920 பின்னர் அமெரிக்காவில் தோன்றியது.