பேச்சு:வீரத்தமிழர் முன்னணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Gowtham Sampath:வீரத்தமிழர் முன்னணி என்பது நாம் தமிழர் கட்சின் ஒரு பிரிவு நாம் தமிழர் கட்சி எனபது அரசியல் கட்சி வீரத்தமிழர் முன்னணி என்பது பண்பாடு சார்ந்த அமைப்பு.--பாலாசி (பேச்சு) 16:01, 23 சூன் 2020 (UTC) @Eeebalaji82: இக்கட்டுரை முழுக்க, முழுக்க விளம்பரம் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது மற்றும் இந்த அமைப்பு அந்த கட்சியின் துணை அமைப்பாகும், ஆகையால் நாம் தமிழர் கட்சி கட்டுரையிலேயே, வீரத்தமிழர் முன்னணி என்னும் தலைப்பை சேர்த்து, அதில் இதனை பற்றிய தகவல்களை தரலாம்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 20:19, 23 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: இக்கட்டுரை முழுக்க எழுதியது நான் தான் இது விக்கிபிடியாவின் வரைமுறைகளுக்கு உட்பட்டே எழுதியுள்ளேன்.அனைத்து மேற்கோளும் வெளியிணைப்பு வாயிலாக சுட்டி காட்டபட்டுள்ளது.விக்கிபிடியா என்பது கட்டற்ற கலை களஞ்சியம் இது அனைத்திற்கும் இடம் கொடுக்க வேண்டும் அதுவே நன்று.விளம்பரம் நோக்கிலேயே எழுதப்பட்டுள்ளது என கூறியுள்ளீர் எதன் அடிப்படையில் என்று விளங்கவில்லை.--பாலாசி (பேச்சு) 08:29, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82: இந்த தொகுப்பை பாருங்கள், நான் எதை விளம்பரம் என்று சொன்னேன் என தங்களுக்கு புரியும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:23, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: வேல் வழிபாடு என்பது வீரத்தமிழர் முன்னணி முக்கிய நிகழ்சி அதை அழித்து விட்டீரே அது விளம்பரம் அல்ல அந்த நிகழ்வுகளுக்கு மேற்கோள் கொடுத்துள்ளேன் பிறகும் அதனை விளம்பரம் என்கிறீரே.--பாலாசி (பேச்சு) 15:10, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82: வேல் வழிபாடு பற்றி உள்ளது பாருங்கள்.-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:15, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த பெரும் போராட்டம் மற்றும் மாநாடு நிகழ்வு காணவில்லை--பாலாசி (பேச்சு) 15:20, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath:மாநாடு நிகழ்வு அனைத்து உடகங்களிலும் பதிவான செய்தி முக்கியமாக இந்த கட்டுரையை நான் எழுதியது வரலாற்றை பதிவு செய்ய மட்டுமே.--பாலாசி (பேச்சு) 15:27, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82:

Untitled[தொகு]

  • நீங்கள் சுட்டியுள்ள இந்து தமிழ்- நாளிதழ் பக்கத்தில் இது ஒரு அரசியல் கட்சியல்ல எனக் கூறப்பட்டாலும் 2016 தேர்தலில் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • தைப்பூசம் பொதுவிடுமுறை கோரிக்கை குறித்த உங்கள் பதிவில் அதற்கான மேற்கோள் பக்க உரை அப்படியே பதிவிடப்பட்டிருந்தது.
\\இந்த மண்ணிற்கு தொடர்பே இல்லாத பல்வேறு பண்டிகைகளுக்கு தமிழக அரசு விடுமுறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால், இந்த தமிழ் மண்ணில் தமிழர் இறையோன் முருகனின் பிறந்த நாளிற்கு இன்றுவரை அரச விடுமுறை வழங்காதது மிகுந்த உள்நோக்கம் உடையது. தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஆங்கிலப் புத்தாண்டு , தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீரர் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, ஓணம் என எத்தனையோ பண்டிகைகளுக்கு விடுமுறையை கொடுத்த தமிழக அரசு இதுவரை முருகனின் தொடர்பான எந்த ஒரு விழாவிற்கும் விடுமுறை வழங்காதது ஏன் ? எனும் கேள்வி‌ எழுகிறது. உலகமெங்கும் பரவி வாழுகின்ற ஒட்டுமொத்தத் தமிழர்களின் இக்கோரிக்கையை ஏற்று ஒவ்வொரு தைப்பூச நாளன்றும் தமிழக அரசு அரசுப்பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்\\[1]

இது "பதிப்புரிமை மீறல்". பதிவுகள் நீக்கப்படுவதற்கு பதிப்புரிமை மீறல் ஒரு வலுவான காரணம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். மேற்கோள் பக்கங்களின் உள்ளடக்கங்களிலுள்ள கலைக்களஞ்சியத்திற்கு ஏற்ற கருத்துக்களை மட்டும் சுருக்கமாக உங்கள் சொந்த நடையில் மாற்றி முடிந்தவரை எழுத்துப்பிழைகளைத் தவிர்த்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 16:49, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82: விக்கியின் விதிமுறைகளை தெரிந்துக் கொள்ளவும். நன்றி-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:16, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: நண்பரே இங்கு உள்ள கட்டுரையில் உள்ள மேற்கோள் 1,2,3,4,5,6 ல் உள்ள எந்த இனைப்புமே வேலை செய்யவில்லை அதில் மேற்கோள் காட்டபட்டுள்ள செய்திகளை நீக்கவும்.--பாலாசி (பேச்சு) 20:12, 24 சூன் 2020 (UTC)[பதிலளி]

@Eeebalaji82:வணக்கம். இந்த தொகுப்பை நீக்கியது சரியே. இது விளம்பர நோக்கம் கொண்டது தான். பொதுவாக ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருக்கும் ஆனால் ஒரு விக்கிப்பீடியராக நாம் எழுதும் போது அது படிக்கும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டுமல்லவா? உதாரணமாக நான் சச்சினைப் பற்றி எழுதுகிறேன் என வைத்துக் கொள்ளுங்கள் உலகத்திலேயே இவர் தான் சிறந்த வீரர் என எழுதினால் கோலியின் ரசிகர்களுக்கு அது ஒவ்வாததாக இருக்கத்தானே செய்யும். நீங்கள் எழுதிய இந்த மண்ணிற்குத் தெடர்பே இல்லாத என்று கூறியுள்ளது விக்கிப்பீடியா போன்ற தளத்திற்கு உகந்ததல்ல என அறியவும். இந்த இணைப்பில் இந்தக் கட்டுரை தொடர்பான யாரும் வழக்குத் தொடுக்கவில்லையே. பெரும் மக்கள் திரள் பேரணி ஆகியவை விளம்பர நோக்கம் கொண்டதாகவே கருதப்படும். நீங்கள் நினைக்கலாம் ஏம்பா இதெல்லாம் ஒரு பெரிய விசயமா எடுத்துகிட்டு நீக்குறீங்க அப்டினு ஆனா இத இப்படியே விட்டுட்டா விக்கிப்பீடியா அரசியல் இதழ் மாதிரி ஆகிடும். இந்தக் கட்டுரையின் சில பகுதிகள் நீக்கப்பட்டது தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாமலே இது போன்ற மற்ற கட்டுரைகளில் தாங்கள் உரையாடுவதாக நான் நினைக்கிறேன். இறுதியா ஒரு கோரிக்கை, எதனையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாம். தங்களால் இயன்ற அளவு விக்கியில் பங்களித்து உதவவும் நன்றி ஸ்ரீ (✉) 14:27, 25 சூன் 2020 (UTC)[பதிலளி]