பேச்சு:விடுதலைப் புலிகளின் கொள்கைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுநிலைமை பற்றிய குறிப்பிட்ட விமர்சனங்களைத் தரவும். --Natkeeran 13:01, 20 ஆகஸ்ட் 2008 (UTC)

ஒரு இயக்கத்தின் கொள்கைகளை அவர்களது/ அவர்களுக்கு சார்பான இணையத்தளங்களைக் கொண்டு எழுதுவது எவ்வாறு நடுநிலையாக இருக்க முடியும்? --Terrance \பேச்சு 01:23, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
இதில் எவை தவறான தகவல்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள். ஒரு இயக்கத்தின் கொள்கைகளை அதன் ஊடகங்களில் இருந்துதான் முதன்மையாக புரிந்து கொள்ள முடியும். இலங்கை அரசைப் பற்றி எழுத விடுதலைப் புலிகள் வலைத்தளங்களிடமா செல்ல முடியும். உங்களுக்கு வி.பு மீது விமர்சனம் இருந்தால் விடுதலைப் புலிகள் நோக்கிய விமர்சனங்கள் என்ற கட்டுரையில் தகுந்தவாறு சேர்க்கலாம். குறிப்பிட்டு சொல்லாமல் மொத்தமாக நடுநிலை இல்லை என்பது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. --Natkeeran 13:20, 21 ஆகஸ்ட் 2008 (UTC)
//உங்களுக்கு வி.பு மீது விமர்சனம் இருந்தால்// //சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது// நற்கீரன் இப்படி என்னைப்பற்றிய தனிப்பட்ட விமர்சனங்களை இனிவரும் கலந்துரையாடல்களில் தவிர்த்துக்கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன். கொளகைகளை அவர்களது இணையத்தில் இருந்து எடுப்பது பற்றி பிரச்சினை இல்லை. ஆனால் அவற்றை நடுநிலையான மூலங்கள் மூலம் ஆதரப்படுத்த வேண்டும். அல்லது அவை ஒரு பக்க சார் கருத்துக்களாக தான் கொள்ளப்பட வேண்டும். அதைத் தான் குறிப்ப்பிட்டேன்.--Terrance \பேச்சு 05:51, 24 ஆகஸ்ட் 2008 (UTC)
ஆமாம். அது தவறு. மன்னிக்க. இருப்பினும் நீங்கள் இன்னும் குறிப்பாக எவை நடுநிலை அற்றவை என்று சுட்டவில்லை. மேலும், வி.பு கொளைகளை ஆழமாக அலசும் "நடுநிலைமை" ஊடகங்களை நீங்கள் சுட்டினால் நன்று. நன்றி. --Natkeeran 14:59, 24 ஆகஸ்ட் 2008 (UTC)