பேச்சு:மதன் (விடுதலை புலி)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையின் குறிப்பிடு தகைமை தெளிவில்லை. ஏதோ ஒரு தாக்குதலிற் கொல்லப்பட்டாரென்றால், அப்படிப்பட்டோர் ஏராளம். அத்தகைய எல்லாருக்கும் கட்டுரைகள் அமைத்துக் கொண்டிருப்பதா? ஒன்று தான் ஆதாரம். இனி இது போன்ற கட்டுரைகள் ஆயிரக் கணக்கில் எழுதப்பட்டால் என்ன செய்வது?--பாஹிம் (பேச்சு) 01:55, 15 மார்ச் 2015 (UTC)

கவனிக்க: நிரோ, சந்திரவதனா, சிறீதரன். இதே போன்ற இன்னும் சில கட்டுரைகளிலும் இவ்வாறான வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு: கப்டன் சிதம்பரம், உமையாள், சந்தனா.--இரவி (பேச்சு) 12:27, 15 மார்ச் 2015 (UTC)


நன்றி இரவி கவனிக்கிறேன். --Chandravathanaa (பேச்சு) 08:52, 16 மார்ச் 2015 (UTC)

இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்[தொகு]

எம்மவரின் சான்றுகள் பல ஏற்கெனவே அழிக்கப்பட்டு விட்டன. விக்கியில் தேடித் தேடி உருவாக்கிய பல கட்டுரைகளை சான்றுகளே இல்லை என்று சொல்லி அழித்து விட நினைப்பது வருத்தத்தையே தருகிறது. இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இருந்த பல சான்றுகள் இன்று இல்லை. இங்கும் அழிக்கப்பட்டால் என்றைக்குமே இல்லாது போய்விடுவார்கள். --Chandravathanaa (பேச்சு) 09:47, 27 மார்ச் 2015 (UTC)