பேச்சு:பாலசிங்கம் நடேசன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

//முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையினரின் முற்றுகைத் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் பாதுகாக்குமாறு நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரும் மே 18 (2009) அதிகாலை 5:45 மணி வரை வரை உலக சமூகம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புக்களிடமும் கோரிக்கை விடுத்திருந்ததாக புலிகளின் பேச்சாளர் செல்லப்பா பத்மநாதன் தெரிவித்தார்[3].//

இந்த வசனம் முற்று முழுதாக தவறானது. இதன் மூலம் இலங்கை இராணுவத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைகின்றது. இங்கு சிங்களப் படை, போராளிகள் போன்ற சொற்கள் கவனிக்கப்பட வேண்டும். பொது மக்கள் என்ற சொல் இருக்கலாம். எனினும் இதற்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழ் வின் இணையத்தளத்தின் ஆதாரம் இணைப்பு செயலற்றது. அகவே இந்த வசனம் உறுதிப்படுத்தும்படியாக இல்லை --Fasly (பேச்சு) 07:07, 10 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]