பேச்சு:பழவேற்காடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழவேற்காடு என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
பழவேற்காடு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


அடையாளம் காட்டா பயனர் இட்ட கூடுதல் தகவல்[தொகு]

பழமை மாறா பழவேற்காடு""

சென்னை மயிலை மறை மாவட்ட முதல் திருத்தலம் (கி.பி.1515)

சென்னை அடுத்த பழவேற்காடு பழமையும் தொன்மையும் வாய்ந்த மீனவர் பகுதி .இங்குள்ள நடுவூர் மகிமை மாதா கோவிலானது போர்சுகீசியர் காலத்தில் கி பி .,1515 ஆம் ஆண்டு கட்டப்பட்டது .பின்னர் டச்சுகாரர்களால் திருப்பணி நடைபெற்ற புராதான கோவில் . சுயம்புவாய் கடலில் கிடைத்த மகிமை அன்னைக்கு மத பாகுபாடின்றி ஆண்டுபெருவிழா வெகுசிறப்பாக அனைத்து மதத்தவரும் பங்கேற்கும் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடக்கும் . இக்கோவிலை திருத்தலமாக அறிவிக்ககோரி பங்கு மக்கள் மற்றும் பங்கு தந்தைகளின் கோரிக்கைகளை ஏற்று சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் சின்னப்பா கலந்து கொண்டு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட திருத்தலங்களில் 12 ஆவது திருத்தலமாக அன்னை மகிமை மாதா ஆலயத்தை அறிவித்தார் .பின்னர் பங்கு தந்தைகளுடன் சென்று மகிமை அன்னைக்கு குத்துவிளக்கு ஏற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார் . .பின்னர் பேராயர் சின்னப்பா ,கூறுகையில் கடந்த ஏழு ஆண்டுகளில் 12 ஆலயங்கள் திருத்தலங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது .தமிழகத்தில் அன்னை வேளங்கண்ணி ,சாந்தோம் ,மணலி இன்பான்ட் ஜீசஸ் ஆலயம் வரிசையில் பழமை வாய்ந்த "பழவேற்காடு மகிமை மாதா" ஆலயமும் தமிழகத்தில் 12-வது சென்னை மயிலை உயர் மறை மாவட்ட திருத்தலமாக அங்கீகரிக்கப்பட்டு அதற்க்கான அறிவிப்பு பத்திரம் பங்கு மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டது .மகிழ்சிகரமான இந்நன்னாளில் வரலாறு படைத்த இப்பகுதியில் மதம் மொழி பாகுபாடு இன்றி அன்பும் அமைதியும் பெற்று திகழவேண்டுமென் புதிய திருத்தல அறிவிப்பை வெளியிட்டு 2012 ஆம் ஆண்டு 22 செப்டம்பரில் பேராயர் சின்னப்பா கருத்து தெரிவித்தார். இவ்விழாவில் முன்னாள் பங்கு தந்தை ராயன்னா,அந்தோணி இப்போதைய பங்கு தந்தை ஜூடு பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

-பார்த்தசாரதி ரெ .இல., மெதூர்-திருவள்ளூர் மாவட்டம் ...........

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பழவேற்காடு&oldid=3813677" இலிருந்து மீள்விக்கப்பட்டது