பேச்சு:பரேட்டோ கொள்கை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உபயோகப்படுத்தி x பயன்படுத்தி[தொகு]

பயன் என்பது எளிய சிறிய சொல். உபயோகம் என்பது ஏறத்தாழ இரு மடங்கு நீளமானது. மேலும் "-படுத்தி" என்றெல்லாம் சேர்க்கும் பொழுது இன்னும் நீளும். பயன், பயன்பாடு, பயன்பாட்டு-, பயனாளி, பயனர், பயன்கூட்டி, பயனளி, பயன்சேர்ப்பி, பயன்முக (applied, practical), பயன்தேர்ந்து, பயன்தேராமல், வெட்டிப்பயன், பயனில்லா, உறுபயன், தேர்பயன், கடைப்பயன், சிறுபயன், குறுபயன், பெரும்பயன், பயனருகிய, விளைபயன், நற்பயன், செம்பயன், புதுப்பயன், மெய்ப்பயன், பயன்மை, விரிபயன் என்று ஏராளமான முறைகளில் விரிந்து பயனளிக்ககூடிய சொல். உபயோகம் இப்படிப் பயனளிக்ககூடிய, விரிவடையக்கூடிய சொல் அல்ல. உபயோகம் என்பது சமசுக்கிருதச்சொல் என்பதால் அப்படி சொல்லவில்லை. தமிழ்ச்சொல்லின் பயன்பாடு சிறப்பானாது, வளம் கூட்டுவது. அதனால் எல்லா இடத்திலும் உபயோகம் என்னும் சொல்லை நீக்கப் பரிந்துரைக்கவில்லை. தவறாக நினைக்க வேண்டாம். பல இடங்களில் இருக்கட்டும், ஆனால் பயன், பயன்பாடு, என்னும் சொற்களைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன். --செல்வா 02:05, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

இனி இந்த சொல்லை எனது கட்டுரைகளில் தவிர்க்கிறேன்.--கார்த்திக் 07:59, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
கருதியதற்கு நன்றி கார்த்திக்; தவிர்க்க வேண்டும் என்பதற்காகக் கூறவில்லை. பயன் என்னும் சொல்லையும் பயன்படுத்துங்கள். விரிவடையக்கூடிய சொல், மற்ற தமிழ்ச்சொற்களோடு இணங்கி இயையக் கூடிய சொல் என்னும் கருத்தைப் பகிரவே குறிப்பிட்டேன். நன்றி.--செல்வா 19:06, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

பரெட்டோ[தொகு]

நற்கீரன் நக்கீரன், நீங்கள் வில்ஃவிரெடோ பரெட்டோ (Vilfredo Pareto) அவர்களின் கருத்தைச் சொல்கின்றீர்கள் என நினைக்கின்றேன். இத்தாலியராகிய இவர் பெயரை பரெட்டோ அல்லது பரிட்டோ என்று கூற வேண்டும் என நினைக்கின்றேன். இத்தாலிய மொழி ஒலிப்பொழுக்கம் உள்ள மொழி. முதல் அசை ப என்பது சரியாக இருக்கும். --செல்வா 14:54, 7 ஏப்ரல் 2010 (UTC)

Pareto என்னும் இத்தாலியச் சொல் குறில்-நெடில்-நெடில் என ஒலிக்கும். எனவே தமிழில் பரேற்றோ என்பது பொருத்தமாகலாம்.--George46 15:32, 7 ஏப்ரல் 2010 (UTC)

மிக்க நன்றி. பரேட்டோ என்று எழுதலாமா? நான் பரீட்டோ என்றும் சொல்லக் கேட்டுள்ளேன் (ஆனால் அது சரியான ஒலிப்பாக இல்லாமல் இருக்கலாம்)--செல்வா 16:20, 7 ஏப்ரல் 2010 (UTC)


ஈ ஒலியை விட ஏ ஒலி இத்தாலிய பலுக்கலுக்கு இசைவானது. ஆங்கிலப் பாணியில் ஈ ஒலிப்போர் உண்டு. ட் ஒலி சிறிது கடினமாய் இருக்கும். எனவே ற் மெல்லொலி சிறப்பு எனத் தோன்றுகிறது. வணக்கம். --George46 16:35, 7 ஏப்ரல் 2010 (UTC)

ஆம் இந்த ட் <-> ற் பல கருத்துகள் உள்ளன. இலங்கைத் தமிழர்களும், மலையாளிகளும், குமரி மாவட்டத் தமிழர்களில் சிலரும் ற்ற என்பதனைப் பயன்படுத்துகின்றார்கள். பீற்றர், பரேற்றோ என்பன இப்படியான ஒரு முறையே. நாவளை ஒலியாகிய ட் முற்றிலும் பொருத்தமானதல்ல, ஆனால் ஆங்கில t வுக்கு ஈடாகப் பல இடங்களில் பயன்படுகின்றது (திரிபு எனினும்). இக்கருத்துகளை இங்கு பலரும் அறிவர். எனக்கு பரேட்டோ என்று இருந்தாலும் பரேற்றோ என்று இருந்தாலும் ஒன்றே, ஆனால் முதல் எழுத்துப் பெயர்ப்பு கூடுதலான தமிழர்களால் ஏற்கப்படுவது.--செல்வா 16:50, 7 ஏப்ரல் 2010 (UTC)


உங்கள் கருத்துக்கு முற்றும் உடன்படுகின்றேன்.--George46 17:40, 7 ஏப்ரல் 2010 (UTC)

நன்றி.

தலைப்பு மாற்றம்[தொகு]

பவுல் லி. வறுவேல் (George46) பரிந்துரைத்தவாறு தலைப்பை மாற்றியுள்ளேன். --செல்வா 13:56, 19 ஏப்ரல் 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பரேட்டோ_கொள்கை&oldid=1653883" இலிருந்து மீள்விக்கப்பட்டது