பேச்சு:பனிமலைப் பூண்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளக்கம் தேவை[தொகு]

பனிமலைப் பூண்டு எனும் இத்தொகுப்பில் பனிமலைப் பூண்டின் தாவரவியல் பெயராக Allium sativum L. என்றும் Allium schoenoprasum என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு தாவரத்திற்கு ஒரு தாவரவியல் பெயர்தான் இருக்க வேண்டும். ஆனால் இங்கு இரு பெயரினை எந்த அடிப்படையில் கொடுத்துள்ளீர்கள். மேலும் இக்கட்டுரையினை மேற்கண்ட இரண்டு ஆங்கிலத் தொகுப்பின் ஒன்றுடன் இணைக்கவேண்டும் அதுவும் செய்ய வில்லை. இது போன்று குழப்பம் ஏற்படுத்தும் தொகுப்புகளைத் தவிர்க்கவும். சத்திரத்தான் (பேச்சு) 06:17, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]

ஆங்கில விக்கிப்பீடியாவில் இருப்பதை என்னால் இயன்ற வரை தமிழ் ஆக்கினேன். தகவலுழவனிடம் இது குறித்து பேசுகிறேன். Rabiyathul (பேச்சு) 13:22, 11 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
எனக்கும் ஐயம் உள்ளது. இது தாவர வகையா அல்லது கலப்பினமா என தெரியவில்லை. ஆங்கில விக்கியிலும் தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. ஏற்கனவே அதுபோல சொல்லி மாற்றியருக்கிறேன்.எ-கா en:Talk:Chrysojasminum humile கோயமுத்தூர் வேளாண் பல்கலையின் பேராசிரியரை , சத்தியராசுடன் நேரில் சந்திக்க உள்ளேன். வினவிப் பார்க்கிறேன். விடைதெரிந்தால், ஆங்கில விக்கியிலும் மாற்ற கேட்போம்.உழவன் (உரை) 03:54, 12 மார்ச்சு 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பனிமலைப்_பூண்டு&oldid=3907752" இலிருந்து மீள்விக்கப்பட்டது