பேச்சு:நீரிய மின்மி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாம் "ion, ionizing, ionization, cation, anion.." போன்ற பல கலைச்சொற்களில் வருவனவற்றை எப்படிக் கையாளுவது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அயன், அயான், அயனி என்பதை ion என்பதற்கும், ionization என்பதை அயனாக்க, அயனியாக்கம் என்றும் பயன்படுத்துகின்றோம். இந்த ஆங்கிலச்சொல்லை 1834 இல்தான் முதன் முதலாக அம்மொழியில் பயன்படுத்தினர். முதன்முதல் மின்பகுப்பாய்வு அல்லது மின்னாற்பகுப்பு எனப்படும் "electrolysis" என்பதைப்பற்றிப் பேசும்பொழுது ion என்னும் சொல் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டது. மின்னாற்பகுப்பு முறையில் மின் தகடுகள் அல்லது மின் முனைகளுக்கு இடையே "பிரிந்து" பாயும் (செல்லும்) கூறுகளுக்கு இச்சொல்லைப் பயன்படுத்தினர். பிற்பாடுதான், ஓர் அணுவின் அலல்து மூலக்கூற்றின் அல்லது ஒரு வேதிக் குழுவின் மின்மத்தன்மையைக் குறிக்க (பொதுவாகக் குறிக்க) இச்சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த பின்னால் வந்த சொற்பொருள் பயன்பாடே இன்று ஆங்கிலத்தில் உள்ளது. ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி (OED), கூறுவது, "Originally: either of the constituents which pass to one or other electrode during electrolysis (obs. except as in the later use). In later use: any individual atom, molecule, or group having a net electric charge (either positive or negative) through the loss or gain of an electron. Cf. cation n., anion n.An ion is symbolically represented with a superior plus or minus sign, thus: Cl−, a chlorine ion with one negative charge, Mg2+, a magnesium ion with two positive charges. carbonium, hydrogen, radical, sulphate ion, etc.: see the first element. See also zwitterion n." என்கின்றது. மைக்கேல் பாரடே அவர்களும் வெவெல் (Whewell) அவர்களும் இது பற்றி 1834 இல் பேசியதை எடுத்துக்காட்டாகத் தருகின்றது, ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகராதி,

  • 1834 W. Whewell Let. to Faraday 5 May in I. Todhunter William Whewell (1876) II. 182 If you take anode and cathode, I would propose for the two elements resulting from electrolysis the terms anion and cation,..and for the two together you might use the term ions.
  • 1834 M. Faraday in Philos. Trans. (Royal Soc.) 124 79, I require a term to express those bodies which can pass to the electrodes... I propose to distinguish these bodies by calling those anions which go to the anode of the decomposing body; and those passing to the cathode, cations; and when I have occasion to speak of these together, I shall call them ions. [Note] Since this paper was read [on 23 Jan., 6 and 13 Feb., 1834], I have changed some of the terms which were first proposed.

"ion" என்பதற்கு என் பரிந்துரை மின்னணு அல்லது மின்மி என்பதாகும். ionization என்பதை மின்னணுவாக்கம், மின்மியாக்கம் எனலாம். காமாக் கதிர்கள் பாயும் பொழுது மின்னணுவாக்கம் நிகழும் அல்லது மின்மியாக்கம் நிகழும். கதிர்வீச்சில், மின்னணுவாக்கும் (மின்மியாக்கும்) வீச்சு என்றும் அப்படி மின்னணுவாக்காத வீச்சு (கதிர்வீச்சு) என்றும் உண்டு. என்பன எடுத்துக்காட்டுகள். அயன் என்றால் பிரம்மா என்னும் கடவுள் என்றும் பொருள் உண்டு (ஒரே சொல் பல பொருள்களைக் குறித்தில் சிக்க இல்லை, அது எல்லா மொழிகளிலும் இருபப்து போலவே தமிழிலும் உண்டு; பல்பொருள் ஒருமொழி.) ஆனால் மின்னணு, மின்மி என்பன சட்டென பொருளுணர்த்தும். எதிர்மின்னி கூடுதலாக இருந்தாலோ, குறைந்து இருந்தாலோ ஓர் அணுவோ, மூலக்கூறோ அதன் மின்ம நடுநிலை மாறி, எதிர்மின்ம அணுவாகவோ, நேர்மின்ம அணுவாகவோ மாறும். எதிர்மின்ம மூலக்கூறு, நேர்மின்ம மூலக்கூறு என்றும் பிரித்தும் காட்டலாம். "ionization" என்னும் சொல்லாட்சி 1891 முதல் ஆங்கிலத்தில் இருக்கின்றது. (

1891 G. F. Fitzgerald in Rep. Brit. Assoc. Advancem. Sci. 1890 327, I object to the term dissociation as applied to the ions in an electrolyte... I would..appeal to both sides to adopt some neutral term such as ‘ionisation’ to express the state of ions in electrolytes.

OED

--செல்வா (பேச்சு) 14:20, 27 சூலை 2012 (UTC)--செல்வா (பேச்சு) 14:54, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

நீரிய மின்மி என்ற தலைப்புக்குக் கட்டுரை நகர்த்தப்பட்டது. --மதனாகரன் (பேச்சு) 12:52, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]
மிக்க நன்றி. --செல்வா (பேச்சு) 13:02, 1 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இன்னொரு கருத்து[தொகு]

நீரிய அயனியானது நேரயனியாகவோ மறையயனியாகவோ அமையலாம். என்ற பயன்பாட்டில் மறையயனி என்பது எதிர்ம மின்மம் கொண்ட "அயனி"யைக் குறிக்கின்றீர்கள் என நினைக்கின்றேன். "மறை" என்னும் சொல்லாட்சி எதிர்ம மின்மத்துக்குப் பொருந்தாது. மறு என்பதில் இருந்து மறை என்பது உருவாகும் எனினும், இல்லாமை என்பதே அதன் பொருளாகும். எதிர்மறை என்னும் பொழுதே எதிரான தன்மை உடையது என்னும் பொருள் சுட்டும். மறுதலை என்றாலும் anti, opposite போன்ற எதிரான நிலைகளைக் குறிக்கும். எப்படியாயினும் குழப்பம் தருவதாக உள்ளது. எனவே நீரிய அயனியானது நேரயனியாகவோ எதிர்ம அயனியாகவோ அமையலாம் என்று வேண்டுமானால் குறிக்கலாம். இப்படியே திருத்தியும் விடுகின்றேன்.--செல்வா (பேச்சு) 14:32, 27 சூலை 2012 (UTC)[பதிலளி]

தவறாகவே குறிப்பிட்டுள்ளேன். எதிர் மின்மியென்றே இருக்கலாமே... எதிர்ம மின்மி என்று நீட்டிக்க வேண்டிய தேவை உண்டா? --மதனாகரன் (பேச்சு) 12:38, 28 சூலை 2012 (UTC)[பதிலளி]
எதிர்ம மின்மி என்று நீட்டிக்கத் தேவை இல்லை. ஆனால் நான் அப்படி எழுதியதற்கான காரணம் எதிர்மின்னி (எலக்ட்ரான்) என்பதோடு மிக நெருக்கமாக இருப்பதால் குழப்பம் ஏதும் வருமோ என நினைத்தே எதிர்ம மின்மி (negative ion), நேர்ம மின்மி (postive ion) என நீட்டித்துக் கூறினேன். மேலும் ஒரே ஒரு எழுத்தே கூடுதலாக வந்துள்ளது. மாற்றத்துக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி மதன்.--செல்வா (பேச்சு) 13:02, 1 ஆகத்து 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 10:58, 2 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நீரிய_மின்மி&oldid=1179878" இலிருந்து மீள்விக்கப்பட்டது