பேச்சு:நா. கதிரைவேற்பிள்ளை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நா. கதிரைவேற்பிள்ளை (1844-1907) ஒரு யாழ்ப்பாணப் புலவர்.

இவ்வாறு முதன் முதலில் கட்டுரையை இங்கு பதிந்தவர் குறிப்பிட்டுள்ளார். எங்கிருந்து இவர் இந்தத் தகவலை (பிறந்த ஆண்டு) எடுததார் எனத் தெரியவில்லை. பிறந்த ஆண்டு குறித்து பல வேறுபட்ட தகவல்கள் உள்ளன. திரு வி.க. அவர்கள் 1860 எனக் குறிப்பிட்டுள்ளார். குன்றக்குடி பெரியபெருமாள் அவர்கள் 1871எனக் குறிப்பிட்டுள்ளார். தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் தெரியப்படுத்தினால் நல்லது.--Kanags 02:27, 24 ஜூன் 2006 (UTC)

என்னிடம் தகவல் இல்லை, ஆனால் தமிழ் கலைக்களஞ்சியத்தில், 3ஆம் தொகுதியில்,பக்கம் 184ல் கதிரைவேற்பிள்ளை, நா. பற்றி ஒரு குறுங்கட்டுரை இருப்பதாக முதல் 9 தொகுதிக்கான பொருட்குறிப்பு அகராதியில் ஒரு குறிப்புள்ளது. கு. கதிரைவேற்பிள்ளை என்னும் இன்னொருவரைப் பற்றியும் அதே பக்கத்தில் வேறு ஒரு குறிப்பும் உள்ளது. கலைக்களஞ்சியத்தைப் பார்த்து யாரும் குறிப்பு தந்தால் நன்றாக இருக்கும் (இந்தியா,இலங்கை??) --C.R.Selvakumar 05:26, 24 ஜூன் 2006 (UTC)செல்வா

1. நா. கதிரைவேற்பிள்ளை (1844-1907) - புலோலி - இவர் சவைசமயத்திற்கு எதிரான கண்டனங்களுக்கு எதிர்க்கண்டனம் / விவாதங்ககளில் முன் நின்றவர். காசிவாசி செந்தி நாதையர் போன்றோருடன் நெருங்கிய தொடர்புடையவர். மாயாவாத தும்சகோளரி என்று அறியப்படுபவர். இவருடைய புத்தகங்கள் http://www.viruba.com/sekaram/Authorbooks.aspx?id=24 சுட்டியில்.


2. கு. கதிரைவேற்பிள்ளை ( 1829 - 1904 ) - உடுப்பிட்டி அல்லது வல்வை சேர்ந்தவர், வைமன் கதிரைவேற்பிள்ளை என்றும் அறியப்படுபவர் - 1863 இல் இலங்கைத் தேசாபிமானி என்னும் பெயரில் வாரப் பத்திரிக்கை தொடங்கி நடத்தியவர். வழக்கறிஞர். நீதிபதி. இவர் தனது தமிழ்ச் சொல்லகராதி தயாரிப்பின் இடையில் அதாவது "த" வரைக்குமான முதற் தொகுதியுடன் இறந்துவிடுகிறார். பின்னர் அவருடைய மகன் க.பாலசிங்கம் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் உதவியுடன் மற்றைய பகுதிகளை முற்றுவிப்பித்து அச்சில் கொண்டு வந்துள்ளார். 01.01.1904 இல் கு. கதிரைவேற்பிள்ளை எழுதிய முன்னுரையுடனும், 28.10.1910 இல் மகன் க.பாலசிங்கம் எழுதிய வெளியீட்டு உரையுடனும் ரா.ராகவையங்கார் / மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளியிடப்பட்டது. இதில் கு.கதிரைவேற்பிள்ளை வல்வை என்று குறிப்பிடும் இடங்களை http://noolaham.net/project/10/963/963.pdf இல் உடுப்பிட்டி என்று குறிப்பிடுகிறார் மு.கணபதிப்பிள்ளை.


http://www.tamilvu.org/library/ldttam/html/ldttaml4.htm படி இருவரும் அகராதிகள் உருவாக்கியுள்ளார்கள்.

--விருபா 18:30, 4 மே 2010 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி விருபா குமரேசன்!! --செல்வா 18:51, 4 மே 2010 (UTC)[பதிலளி]