பேச்சு:நபி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்கித் திட்டம் இசுலாம் (Rated ஆரம்ப-class, தெரியாத-importance)
WikiProject iconஇந்த கட்டுரை விக்கித் திட்டம் இசுலாம்-ன் வாய்ப்பளவில் உள்ளது. விக்கிப்பீடியாவில் இருக்கும் இசுலாம்-தொடர்பான கட்டுரைகள்விரிவாக்க இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். இந்த திட்டத்தில் பங்கேற்க அதன் பக்கத்திற்கு செல்லவும். அங்கே நீங்கள் விவாதிக்கலாம் மற்றும் செய்யவேண்டியவைகளை பார்க்கலாம்
ஆரம்ப நிலை பிரிவில் வரும் கட்டுரை ஆரம்ப  இந்த கட்டுரை ஆரம்ப பிரிவாக தர நிர்ணயிக்கப்பட்டுள்ளது விக்கித்திட்டத்தின் தர நிர்ணைய அளவுகோலில்.
 தெரியாத  இந்த கட்டுரை இன்னும் தர மதிப்பீடு செய்யப்படவில்லை , விக்கித்திட்டத்தின் importance அளவுகோலில்.
 

இசுலாம் கட்டுரையில் "இஸ்லாமிய நம்பிக்கைகள்" என்ற தலைப்பில் இருந்த விளக்கங்கள் கருத்து மாற்றப்படாது இணைக்கப்பட்டுள்ளது. மேலும் நபிமார்கலின் எண்ணிக்கை ஆதார பூர்வமற்றதென்பதால் நீக்கப்பட்டுள்ளது. --Mohamed S. Nisardeen 18:21, 10 மார்ச் 2009 (UTC)

இரண்டு கருத்துகள்[தொகு]

  • இக் கட்டுரையின் உள்ளே கூறியுள்ளவற்றுக்குச் சான்றுகோள்கள் இணைப்பது வலு சேர்க்கும்
  • ரகுமான், ரஃமான் என்று எழுதுவது போல H வரும் இடங்களில் ஃ அல்லது ஃக, ஃகு என்று எழுதலாம். அதே போல காற்றொலி சகரமாகிய S வரும் இடங்களில் ச அல்லது சு அல்லது தமிழ் வழக்கப்படி உயிரெழுத்து முதலில் இட்டு சகரம் இடலாம் அல்லவா? அரபுமொழி அராபியருக்கு புனிதமானது, சமற்கிருதமொழி வேதிய மதத்திற்கு புனிதமானது. இலத்தீன் கிறித்தவர்களுக்குப் புனிதமானது, அதுபோல ஆனால் வேறு ஒரு வகையில் தமிழர்களுக்குத் தமிழ்மொழி முதன்மையானது. எப்படி சமற்கிருதமோ, அராபிய மொழியோ, இலத்தீன மொழியோ வேற்றொலி எழுத்துக்களை ஏற்க இயலாதோ அது போல 2500 ஆண்டுகளாக தன்மரபுடன் வாழும் தமிழ் மொழியும் தன் மரபுகளைப் போற்ற வேண்டும் என்று அம்மொழியாளர்களின் விரும்புவதை ஏன் புறக்கணிக்க வேண்டும். இன்று யுனிக்கோடும் வளர்ந்த தொழில்நுட்பமும் இருப்பதால் அரபுபொழிச் சொற்களை அரபு எழுத்துக்களில் எழுதியும், ஒலிக்கோப்புகள் அருகே இட்டும் ஒலிப்புத்துல்லியத்தைக் காட்டலாம்தானே? --செல்வா 18:47, 10 மார்ச் 2009 (UTC)


தமிழ் மொழியை நான் பேணுகிறேன். (விக்கி பீடியாவில் என்றல்ல எங்கும் எனது எழுத்துகளில் ஆங்கில சொல் கலப்படம் செய்வதை நான் விரும்ம்ம்புவதில்லை.) நான் எழுதிய திருத்தங்களில் இதனுடன் வட மொழியையும் இணைய விடாது முதன்மை படுத்தியேயுள்ளேன். இக்கட்டுரை ஏற்கனவே வேறொரு பயனரால் தொகுக்கப்பட்டு இருந்த ஒன்று. நான் இசுலாம் கட்டுரையிலிருந்த சிறு பகுதியை இணைத்துள்ளேன் பிறகு வட எழுத்துகளை செய்யும் எண்ணத்துடன். --Mohamed S. Nisardeen 19:03, 10 மார்ச் 2009 (UTC)

உங்கள் கருத்துக்கும் உணர்வுக்கும் நன்றி.

(சல்)ஸல்/அலை[தொகு]

"ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்" என்பதை "சல்லல்லாஃகூ அலைஃகி வசல்லம்" என்று கூறலாமா?

முஹம்மத் = முஃகம்மத்?



அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் = அலைஃகிஸ் சலாம் அல்லது அலைஃகிசுசலாது வசுசலாம் ??

(சிறு திரிபுகள் மொழிக்கு மொழி நிகழ்வது தவிர்க்க இயலாது)

--செல்வா 18:53, 10 மார்ச் 2009 (UTC)


///முகம்மத்///பொதுவான பயன்பாட்டில் உள்ளது


///அலைஃகிஸ் சலாம்///பயன் படுத்தலாம். --Mohamed S. Nisardeen 19:05, 10 மார்ச் 2009 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி. --செல்வா 19:15, 10 மார்ச் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நபி&oldid=1688723" இலிருந்து மீள்விக்கப்பட்டது