பேச்சு:தமிழ் ஹைக்கூ கவிதைகள்
தமிழ் ஹைக்கூ கவிதைகள் பல்வேறு பரிணாமங்களில் எழுதப்பட்டு வருகிறது. அழகியலோடு இயற்கை வனப்புகளை மூன்று வரிகளில் என்றென்றும் இனிதாய் இனிக்கும்படி எழுதப்பட்ட கீழ்கண்ட ஹைக்கூ கவிதைகள் உலக அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கின்றன.
அந்தக் காட்டில்
எந்த மூங்கில்
புல்லாங்குழல்
....அமுதபாரதி.
வண்ணத்துப்பூச்சியே
செடியில் அமராதே
பூவென பறித்துவிடுவார்கள்
......பொன் குமார், (நிஜமும் நிழலும்)
பனிக்குழந்தை
ஊஞ்சலாடுகிறது
சிலந்திவலையில்
......அருண்மொழி (பூவரச இல்லை ஊதல்)
கவண் எறியாது கட்டுண்டேன்
கம்பங்கொல்லையில்
பசியாறும் புறாக்கள்
......கா.ந.கல்யாணசுந்தரம் (மனிதநேயத் துளிகள்)
முற்றிய கதிர்
முகம் பார்த்தது
நீர் சூழ்ந்த வயல்
......இ.பரிமளம்
அடர்ந்த இருட்டில்
அழகிய கவிதை
மின் மினிப்பூச்சிகள்
.......பாரதி ஜிப்ரான்.
பறவைகள் முகம் பார்க்க
கண்ணாடியின்றி திரும்பின
வறண்டுபோன நதி
............நா.முத்துக்குமார்
பம்பரம் சுற்ற
நல்ல கயிறு
எறும்பின் பாதை
........மித்ரா
வசந்தம் வரும் என்ற
நம்பிக்கையில்
உதிர்கின்றன சருகுகள்
......ராஜ நிலா
பனைமரத்தின் உச்சியில்
தச்சு வேலையா?
மரங்கொத்தி
.....மகா மதிவாணன்
காற்று நுழைந்து
கவலையுடன் வெளியேறியது
உடைந்த புல்லாங்குழல்
........காவனூர் ந.சீனிவாசன்.