பேச்சு:தன்னின உயிருண்ணி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்பொழுதும் தன்னின உயிர் உண்ணி காட்டுமிராண்டிகளாக அந்தமான் தீவுகளில் காட்டு வாசிகள் வாழ்வதாக சிலவார புத்தகங்களில் படித்திருக்கின்றேன் அவற்றைப் பற்றி ஆதாரத் தகவல்கள் இல்லை. இன்றும் அந்தமான் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை செய்யப்பட்டப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அத்தீவுகளில் இன்னும் வளர்ச்சி அடையாத, சமகாலத்தவர்களை விரும்பாதவரகள் வாழ்வதாகக் கூறுகின்றனர். அவர்கள் வேற்றுப் பிரிவினரை கொன்று புசிப்பவர்கள் (அவர்கள் வாழ்விட காட்டு வாசிகளைத் தவிர மற்றவர்களை விரும்பாதவர்கள்) என கேள்விப்பட்டிருக்கின்றேன். அது உண்மையா? பொய்யா? என்றுத் தெரியாது. நண்பர்கள் அறிந்திருந்தால் அவைகுறித்த தகவல்களை அளிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நானும் முயல்கின்றேன். நன்றி--செல்வம் தமிழ் 07:09, 13 ஏப்ரல் 2009 (UTC)

இக்கட்டுரையும் தன்னினம்_உண்ணுதல் இவ்விரண்டு கட்டுரையும் ஒரே மாதிரியான தலைப்பைக்கொண்டுள்ளதா? --கார்த்திக் 13:08, 13 ஏப்ரல் 2009 (UTC)

ஏறக்கறைய அதுதான் ஆனால் விலங்கியலுக்காக தனியாகத் தொகுத்திருக்கிறீர்கள், இந்த சொல்லின் பொருள் ஒன்றுதான். மனிதர்களை உண்ணுபவர்களுக்காக மனித ஊன் உண்ணிகளை முக்கியப்ப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த சொல் விலங்கியலுக்கு உரித்தான சொல், அப்படியே விட்டு விடுங்கள். ஆங்கிலத்திலும் விலங்கியலுக்காக தனியாக எழுதி உள்ளனர். அக்கட்டுரையில் உள்ளவைகளை இதனோடு இணைக்கலாம் அ இக்கட்டுரையில் உள்ளவைகளையும் அதில் இணைக்கலாம், நன்றி--செல்வம் தமிழ் 17:10, 13 ஏப்ரல் 2009 (UTC)

"இராசநாகம் என்ற பாம்பினம் தன் இனத்தைச் சேர்ந்த பிற பாம்பினங்களையே பொரும்பாலும் உண்டு வாழ்கின்றது இதை தன்னின உயிர் உண்ணி (கானிபாலிசம்) என்று அழைக்கின்றனர்"

தன்னின உயிர் உண்ணி என்றால் தன்னுடைய இனத்தையே அதாவது சிற்றினத்தையே (Species) உண்ணுவதாகும். உதாரணமாக ஒரு புலி இன்னொரு புலியை உண்பது போல். இராசநாகம் தன்னின உயிர் உண்ணிதான் ஏனெனில் சில நேரங்களில் அது தன் பிணையையோ அல்லது குட்டிகளையோ உண்பதால்; பிற பாம்பினங்களை உண்பதாலன்று! ஆதலால் இரண்டாம் பத்தியில் சிறிய மாற்றம் தேவை.

மேலும் கானிபாலிசம் (Cannibalism) என்பதற்கு நிகராக தன்னின உயிர் உண்ணுதல் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன். ஏனெனில் உண்ணி என்பது ஒரு இனத்தை குறிக்கிறது நிற்க இது ஒரு வினை/செயல். செல்வம் தமிழ் உங்களிமன் உடன்பாட்டிற்கு பிறகு மாற்றலாம் :)--கார்த்திக் 17:56, 13 ஏப்ரல் 2009 (UTC)


இந்தப் பெயரை இணையத் தமிழ் பல்கலைக்கழகத்திலும் இந்தப் பெயருடன்தான் உள்ளது. உயிர் உண்ணுதல் என்பது வினை சொல்லிற்காக அதை நான் பயன்படுத்தவில்லை. இனத்தைக் குறிக்கும் சொல்தான். கானிபாலிசம் இனத்தைக் குறிக்கும் சொல்தான். ஆன்ந்ரோபோப்பேகி என்ற சொல்தான் தன்னின மனித ஊன் உண்ணிகளுக்கு தனியாகப் பெயர் உள்ளது. அகராதியிலும் உள்ளது. காலப்போக்கில் இதை கானிபால்ஸ் என்பதை தன்னின மனித ஊன் உண்ணிகளிக்கு வைத்துவிட்டார்கள். இந்த செயல் மனித செயலுக்கு உகந்தது அல்ல என்பதினால் இப்படி உண்ணி என்று வைத்திருக்கலாம். தமிழ் இணைய சொற்களஞ்சியம் மற்றும் அகராதிகளைப் பார்க்கவும்.--செல்வம் தமிழ் 01:36, 14 ஏப்ரல் 2009 (UTC)


இராசநாகம் பற்றி குறிப்பிட்டீர்கள் நானும் உயிரியியல் முன்னாள் மாணவன் என்ற முறையில் தான் இதைக் குறிப்பிட்டுள்ளேன். உங்கள் கட்டுரையிலும் இனப்பெருக்கத்திறகாகவும் உயிர்களை உண்ணுகின்றது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மட்டுமில்லாமல் பாம்பு பிற பாம்புகளையே பொரும்பாலும் உண்ணும் தொலைக்காட்சியிலும் விளக்கியுள்ளார்கள். அது கிடைக்காதபொழுது எலிகளையும் உண்ணும். இதையும் நான் சொல்லவில்லை அறிவியல் சொல்லுகின்றது விலங்கியல் சம்பந்தமான்த் தொலைக்காட்சியில் நேரடியாக விளக்கியுள்ளார்கள் அவ்வப்பொழுது விளக்குகின்றார்கள் இப்பொழுதும் பார்க்கலாம். பாடத்திலும் இப்படித்தான் விளக்கினார்கள்.

அதை உதாரணத்திறகாக குறிப்பிட்டுள்ளேன் அது ஒப்பியோபேகி என்று வரேண்டும் இது ஆங்கில கட்டுரையில் எப்படி வந்திருக்கின்றதோ அப்படிக் குறிப்பிட்டிருக்கின்றேன். விலங்கியல் ரீதியாக மாற்றம் வரும்பொழுது அனைத்தையும் மாற்றலாம் அதை உதாரணத்திற்காக இதையும் குறிப்பிடுவார்கள் ஆகையால் தான் அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளேன். அதிலும் மாற்றம் வரேண்டும். அதேபோல்தான் மனிதர்களுக்கும் தனியாக ஆந்ரோபோப்பேகி வரவேண்டும். இந்த உதாரணம் வேண்டாமொன்றால் உங்கள் கட்டுரையில் இருக்கும் உதாரணத்தையும் கொடுக்கலாம். ஒட்டுமொத்தமாக கானிபாலிசம் என்று சொல்லும் பொழுது இப்பாம்பையும் உதாரணமாக குறிப்பிடுவாரகள். அதனால் தான் உங்கள் கட்டுரையை அதை விலங்கியல் ரீதியாக வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். பிரிப்பதென்றால் ஆங்கில கட்டுரையோடு சேர்ககக் கூடாது. கான்பாலிசம் என்பதற்கு தமிழில் இந்தப் பெயர்தான் உள்ளது.


மனிதனும் காட்டுமாராண்டியாக வாழ்ந்த காலத்தில் இதே போன்றச் செயலைத்தான் செய்திருக்கின்றான். இது ஆங்கில கட்டுரையின் மொழியாக்கம். ஆங்கிலத்தில் ஆந்த்ரோபோப்பேகி என்று தலைப்பிடும் பொழுது தன்னின மனித ஊன் உண்ணிகளைப் பிரித்து கட்டுரையாக மாற்றலாம். ஆகையால் தான் பகுதியாகப் பிரித்துள்ளேன்.--செல்வம் தமிழ் 02:32, 14 ஏப்ரல் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தன்னின_உயிருண்ணி&oldid=365602" இலிருந்து மீள்விக்கப்பட்டது