பேச்சு:சீரகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீரகம் என்பது ஒருச் சிறந்த மூலிகையாகும். இதனைத் தமிழில் அகத்தைச் சீர் செய்வதால் இதனை சீரகம் என அழைத்துவந்தனர். இது தற்காலத்தில் ஜீரகம் என மாறிவருகிறது. உச்சரிப்புப் பிழையால் நம் வேர்ச்சொற்களை இழக்கிறோம். தயைக்கூர்ந்து தமிழர்கள் தமிழில் இல்லாத ஒலியான ஸ, ஜ ஆகிய ஒலிகளை தமிழ் வார்த்தைகளுக்கு இட்டு ஒலிப்பதைத் தவிருங்கள். குறிப்பாக சிறப்பு (Chirrappu), சிரிப்பு (Chirippu), சிவப்பு (Chivappu), சீரகம் (cheerakam), சோம்பு (chompu), சேனைக் கிழங்கு (chaenaik kizhangu), சேவல் (chaeval), சீலை (cheelai), சிகைக்காய் (chikaikkaai), சித்த மருத்துவம் (Chiththa maruththuvam). தமிழகத்தில் புதிதாக ஒருப் பண்பாடு பரவி வருகிறது. அது விற்கு இணையாக Sa இட்டு எழுதும் பழக்கம். இது நம் மொழிக்கு ஒருக் கேடாகும். ஸ (Sa) உச்சரிப்பு தமிழில் இல்லா ஒன்றாகும். "ச" விற்கு இணையாக இடவேண்டியது "Cha" வாகும். இதில் தமிழக அரசும் அங்ஙனமே நடந்துக் கொள்வது யாரோ திட்டமிட்டு தமிழைச் சிதைக்கும் (Chithaikkum) முனைப்புடன் செயல்படுவதுப் (Cheyal) போல் தெரிகிறது. தமிழர்களே விழிப்புடன் இருங்கள். மொழிச் சிதைந்துவிட்டால் வரலாறு உங்களுக்குச் சொந்தமில்லை என்பதை மட்டும் உணருங்கள்.

இதனால் நமக்கு என்ன நன்மை இருக்கிறது.

  1. வேர்ச் சொல் பேனப்படுகிறது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் தமிழில் இருந்து மருவிய பெரும்பாலான வார்த்தைகளை குறிப்பாக ச உச்சரிப்புள்ள வார்த்தைகளை "Cha" எனவே ஒலிக்கின்றனர். ஆனால், மொழிக்கேடாக பிறப்பெடுத்துள்ள நாம் ஸ வென உச்சரிக்கிறோம். இந்த சீரகத்திற்கான வேர்ச்சொல் தமிழாகும். ஆனால் நாம் பயன்படுத்தும் ஒலியான் ஜீரகம் இது தமிழ்ச்சொல்லில் இருந்து விலக்கி வைக்கிறது. இது முற்றிலும் ஒரு தவறான வெளிப்பாடாகும். இங்ஙனம் நடவாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமையாகும். இதனால் தமிழில் இருந்துப் பிரிந்ததுப்போன மொழிகள் சில நாங்கள் சமற்கிருதத்தில் இருந்து உருவானவர்கள் என்றே மார்த்தட்டிக் கொள்கின்றனர். இதற்குக் காரணம் நாம் பின்பற்று உச்சரிப்பு முறையேத் தான். உச்சரிப்பே மொழி. உச்சரிப்பு இல்லையேல் அதுக் கழிவிற்குச் சமமாகும் (Chamamaakum).
  2. நம் தனித்துவத்தை இழக்கிறோம். சிகைக்காயை நாம் Shikakai என கூறுவதால் இதன் வேர்ச்சொல் தமிழில்லை என ஆகிறது. என்னங்க நடக்குது இந்த நாட்டில். தாய் மொழியை தானேச் சிதைப்பதுப் போல் ஒரு வரலாறே இல்லையாம். தாய் மொழியை காக்கத்தான் அனைவரும் போராடுவர். ஆனால், தாய் மொழியில் சிதைக்கும் பழக்கும் தமிழர்களுக்கு ஒரு நாகரிகப் பழக்கமாக தொற்றிக் கொண்டது ஒரு புதுவரலாறுப் படைப்பதற்கு என்று நினைத்தால் உள்ளம் குமுறுகிறது. நீங்கள் தவறுதலாய் உச்சரிக்கும் பாங்கு நமக்கென்றுள்ளத் தனித்துவத்தை இழக்க நேரிடும்.
  3. மொழிச்சிதைவு. நாம் நம் சந்ததிக்கு (Chanthathikku) விட்டுச் செல்ல வேண்டியது இயற்கையையும், பண்பாட்டையும், செறிவுள்ள மொழியையும் தான். ஆனால் நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களையும் இல்லை. நல்லப் பண்பாட்டையுமில்லை. நல்ல இயற்கையையும் இல்லை. நல்ல மொழியுமில்லை என்றால் நாமெல்லாம் எதற்கு தமிழ் நம் தாய் மொழியென்று பிதற்றிக் கொண்டிருக்க வேண்டும். ச வை முறையாக உச்சரிப்பதன் மூலம் வல்லின எழுத்து அதற்கு இணையாக வருமொழியில் சகரம் வரின் ச் என்னும் மெய்யெழுத்தை எங்கு ஏற்கும் என்பதை உணர்த்தும். சகரம் வரின் ழ உச்சரிப்புடன் சேர்ந்தொலிக்கும் போது சரியாக உச்சரிக்கும் சீழ் (Cheezh), சோழன் (Chozhan) ஆகியனக் குறிப்பிடத்தக்கவை.

தமிழில் நாய் பெற்ற தெங்கம்பழமென்றொன்று உண்டு. அதாவது, நாய் தானும் உண்ணத்தெறியாமல் அடுத்தவர்களையும் அண்ட விடாமல் இவ்வாறு பாங்கு நிறைந்த மொழியைச் சிதைக் காதீர். சிந்தித்துப் பார்க்க. பாவாணர் ஏன் தேவநேசன் என்னும் தன் பெயரை தேவநேயன் என மாற்றிக் கொண்டார். இடையில் வரும் சகரமானது தமிழுக்குப் பொருந்தா ஒலியைக் கொடுக்கும் என்பதால். இடை மற்றும் கடையில் வரும் சவை உச்சரிக்கும் பாங்கு இதோ - உருசி (Ruchi) rusi அல்ல. பசி (Pachi) pasi அல்ல. இசை (ichai) isai அல்ல. மாடர்னைசேசன் என்றப் பெயரில் மொழியைச் சிதைக்காதீர். உங்களுக்கு வேண்டுமானால் இம்மொழி வேண்டாமலிருக்கலாம். ஆனால் உலகம் தமிழின் பெருமையுணரும் காலம் மிக அருகில் உள்ளது. அப்போது உங்கள் பிள்ளைகள் தமிழைக் கற்கும் போது தமிழ் பண்டுக்காலத்தில் விலங்கியச் சிறப்போடு என்றும் வாழவேண்டும்.

அதனால் தான் தமிழ் பண்டுக்காலத்தில் இருந்தச் சிறப்போடு இன்றில்லை என்பதைத்தான் தமிழக் அரசின் தமிழ் வாழ்த்துப் பாடலில் எத்திசையும் புகழ் மணக்க இருந்தப் பெரும் தமிழணங்கே என எழுதப்பட்டுள்ளதுப்போலும். தயைக்கூர்ந்து ழ உச்சரிப்பை மட்டும் நோக்காமல் ச உச்சரிப்பையும் நோக்கும் படி பணிக்கிறேன். இப்படிக்கு நானும் ஒருத் தமிழ்க்குழந்தை என்ற முறையில் முறையிடுகிறேன். - --சிங்கமுகன் 10:49, 6 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீரகம்&oldid=891601" இலிருந்து மீள்விக்கப்பட்டது