பேச்சு:சிறியானி விஜேவிக்கிரம

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிங்கள ஒலிபெயர்ப்பு[தொகு]

சிங்களச் சொற்களைத் தமிழுக்கு ஒலிபெயர்க்கும் போது பின்வருமாறு ஒலிபெயர்ப்பதே வழமை.

න - ந அல்லது ன (නිකවැරටිය - நிக்கவெரட்டி). පානදුර என்பது பாணந்துறை என்றெழுதப்படுவது பிழை. பானந்துறை என்பதே சரி.
ණ - ண (කුරුණෑගල - குருணாகல்)
ල - ல (අගලවත්ත - அகலவத்தை)
ළ - ள (කළුතර - களுத்துறை) சிங்களத்தில் තර என்றால் තොට - துறை என்று பொருள். බෙන්තර என்பதும் බෙන්තොට என்பதும் ஒன்றே.

எனவே இம்முறையைப் பின்பற்றுவது குழப்பத்தை நீக்கும்.--பாஹிம் (பேச்சு) 03:59, 8 செப்டம்பர் 2015 (UTC)