பேச்சு:சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதனை தீவிரவாதம் என்ற பகுப்பில் இடலாமா என்று குழம்புகின்றேன். பிணக்குள்ள இரு குழுக்களிடையேயான தனிநபர் தாக்குதலாகவே காண்கின்றேன். பொதுமக்களோ பொதுச்சொத்தோ தாக்கப்படவில்லை. சமய அடிப்படைவாதம் அல்லது மாற்றுக்கருத்துச் சகியாமை எனலாம்.--மணியன் (பேச்சு) 04:09, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]

சமய அடிப்படைவாதம் அல்லது மாற்றுக்கருத்துச் சகியாமை என்பனதான் அடிப்படைக் காரணம். ஆயினும் தொடரும் தகவல்கள் சூத்திரதாரிகள் தீவிரவாதத்துடன் தொடர்பு கொண்டிருப்பதைத் தெரிவிக்கின்றன. சிலவேளை தீவிரவாத்திற்கும் அவர்களுக்கும் முடிச்சுப் போடலாம். எப்படியாயினும், தீவிரவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்டிருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தீவிரவாதம். சூத்திரதாரிகள் சரணடைந்துள்ளனர் என்ற செய்தியும் உள்ளது. எனவே புதுத்தகவல்கள் வரலாம். --AntonTalk 04:59, 8 சனவரி 2015 (UTC)[பதிலளி]