பேச்சு:சருகுமான்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

ஆங்கிலத்தில் mouse deer எனப்படுவது சருகுமான் என்பதாகும். இலங்கை, இந்தியா, ஆபிரிக்கா போன்ற இடங்களிலுள்ள உலர் காடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. எலி மான் என்ற பெயரில் எவ்விலங்கும் கிடையாது.--பாஹிம் (பேச்சு) 04:35, 16 செப்டம்பர் 2015 (UTC)

கீழுள்ள இரு செய்திகளில் ”எலி மான்” என்ற பெயர் காணப்படுகிறது.

அவர்கள் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஏற்கனவே ஒரு சொல் இருக்கும் போது அவர்கள் அச்சொல்லை அறியாமையால் ஆங்கிலத்தை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்துள்ள உதாரணங்கள் பல. அருவி என்பது நீர்வீழ்ச்சியானதும் இவ்வாறே.--பாஹிம் (பேச்சு) 07:07, 16 செப்டம்பர் 2015 (UTC)

சருகுமான்களைப் பற்றி நான் ஏற்கனவே சில கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளேன்.

இவையனைத்தும் ஒரே குடும்ப விலங்குகளே. நிலச் சருகுமான் என்பது சருகுமான் குடும்பத்தின் ஒரு சாதியாகும். அச்சாதியின் இனங்களே மேற்குறித்த மூன்று வகையும்.--பாஹிம் (பேச்சு) 07:14, 16 செப்டம்பர் 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சருகுமான்&oldid=1917809" இலிருந்து மீள்விக்கப்பட்டது