பேச்சு:சம அளவு அலுமினியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் எக்சு கதிர் குழாய் கூண்டில் இருப்பதும் அக்கூண்டில் எண்ணெய் இருப்பதும் அதன் பயன் என்ன என்பதும் கூறப்பட்டுள்ளன.மென் கதிர்கள் நோயாளிக்கு தேவையற்ற கதிர் ஏற்பளவினைக் கொடுப்பதால் அவைகள் அகற்றப்பட வேண்டுவது இன்றியமையாதது.அதற்காகவே வடி கட்டிகள் பயன் படுத்தப்படுகின்றன.உள்ளார்த வடிகட்டி என்ன என்று தெரியவரும். தமிழ் விக்கியில் இந்த்த் தகவல்கள் இல்லை என்றே கருகிறேன்.இருக்குமானால் இப்போதே அகற்றிவிடலாம்.வருத்தம் கொள்ளமாட்டேன்.

வரைந்து நீக்கப்பட வளண்டிய காரணம் தெரியவில்லை.இதனையே நீங்கள் விரும்பும் வண்ணம் எப்படி அமைய வேண்டும் என்று கட்டுரையினை அங்கேயே திருத்தி அமைத்து வழிகாட்ட வேண்டுகிறேன் மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.

அன்புடன், அருண்தாணுமாலயன்.

வருந்துகிறேன் ஐயா :(. தங்களின் வளம் மிக்க அறிவியல் கட்டுரைகளை நான் படித்துள்ளேன். தங்கள் கட்டுரைகளை நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர். விமர்சனங்கள், கவிதைகள், குப்பை, கூகுள் மொழிபெயர்ப்பு கட்டுரைகளை உடனே நீக்குதல் வழக்கம். நல்ல உள்ளடக்கம் கொண்டிருந்தாலும், நான்கு வரிகளில் இருந்தால் விரைவு நீக்கல் பட்டியலில் சேர்க்கப்படும். இத்தகைய கட்டுரையை எழுதியவர் ஒரு மாத காலத்திற்குள் கூடுதல் தகவல்களைச் சேர்க்காவிடில், கட்டுரை நீக்கப்படும். இது வழக்கமான செயல்பாடே. தாங்கள் வருத்தங் கொள்ள வேண்டாம். கூடுதல் தகவல்களைச் சேர்த்து விட்டு, நீக்கல் வார்ப்புருவை எடுத்து விடுங்கள். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:37, 19 மே 2013 (UTC)[பதிலளி]

உள்ளடக்கங்கள் போதுமானதாகவே உள்ளது. ஆனால் உள்ளிணைப்புகள் அவசியம் தேவை. இதன் பயன்பாடு என்ன எனக் கூறப்படவில்லை என நினைக்கிறேன். இவற்றை சேர்த்து உள்ளிணைப்புகளை கொடுத்தாலே போதுமானது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:15, 20 மே 2013 (UTC)[பதிலளி]