பேச்சு:சமயம் அறிவியல் முரண்பாடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நல்ல கட்டுரை. இன்னும் விரிவுபடுத்த வேண்டிய பகுதிகளுமுள்ளன. ஒரு சந்தேகம்.

//இறையின் தேவையின்மை//


//அறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.// என உள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றுவாய், மில்லரின் அமினோவமில மூலக்கூறு உற்பத்தி என்பவற்றில் இறையின் தேவையின்மை அல்லது மேலான சக்தி இல்லை என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது. பிரபஞ்சம் en::Protoplanetary nebula இல் இருந்து தொன்றியது என்றால் முதலாவது நெப்பியுலா எப்படித் தோன்றியது. என்ற கேள்வி இயல்பாகவே எழும். உடலங்களின் உடலியக்க உடற்றொழிலியல் ஒருங்கமைப்பு சகல விலங்குகளிலும் அவற்றின் தேவைக்கும் தன்மைக்கும் ஏற்ப இயல்பாகவே வந்தது. இவை தனியே கூர்ப்பு(Evolution) வழிப்பாடுதான் என யாரும் விவாதித்துவிட முடியாது. எனவேதான் இறை இருப்பை மெய்ஞானத்தை விட அறிவியல் தான் அதிகம் நிரூபித்துள்ளது. நமது நிறமூர்த்தங்களை வேறுபடுத்தி வரிசைப்படுத்துவது இந்த நூற்றாண்டில் தான் அறிவியலால் சேய்ய முடிந்தது. இதை இயல்பாக நடந்த கூர்ப்புச் செயற்பாடு ஒவ்வொரு தனியனுக்கும் தனித்துவமானதாக அதாவது எனக்குள்ள நிறமூர்த்த ஒழுக்கு இன்னொருவருக்கு அமையாத வகையில் வடிவமைத்தது என்பதை நம்பிவிடமுடியுமா? அப்படியொரு இயல்பான ஒருங்கமைப்பு சக்தி இருந்தால் அது தான் இறை. வேறில்லை.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 03:41, 8 ஏப்ரல் 2011 (UTC)

சிவகுமார் எந்த அறிவியல் ஏட்டில், அல்லது எந்த சமன்பாட்டில் இந்த இறையின் தேவை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூற முடியுமா. இதுவரைக்கு ஒர் அறிவியல் ஏட்டில், அல்லது சமன்பாட்டில் இது இறை factor என்று கருதி அவர்கள் கோட்பாடு உருவாக்கவில்லை. எல்லாம் தோன்றுவதற்கு ஒரு முதல் காரணமாக இறை தேவை என்பது வழமையான ஒரு சமய வாதம்தான். ஆனால் அந்த வாதம் இட்டுச்செல்வது Infinite regression இக்கே. வாதத்துக்கு, அப்படி அண்டம் தோன்றிய பின்பு இறை அழிந்து விட்டுருக்கலாம். அல்லது அண்டம் தோன்றியதற்கு சாத்தான் காரணமாக இருந்திருக்கலாம். அல்லது அண்டத்தின் தோற்றமும் அழிவும் ஒரு சுழற்சி நிகழ்வாக இருக்கலாம்.

இறையே ஒழுங்கமைப்புச் சக்தி என்பது இன்னுமொரு வழமையான சமய வாதமே. ஆனால் மனிதர்கள் ஆனாலும் சரி இயற்கை ஆனாலும் சரி அது பல போதாமைகளைக் கொண்டுள்ளன(Argument from poor design). இந்த வடிவமைப்புத்தான் இறையின் சிறந்த உற்பத்தி என்றால், இறையின் எல்லாம் அறியும், எல்லாம் வல்ல தன்மைகள் குறித்து சந்தேகங்கள் வருகின்றன. --Natkeeran 16:21, 9 ஏப்ரல் 2011 (UTC)