பேச்சு:குட்டிக்கதைகள் (நூல்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமையின் 5ஆவது தகுதியாக, "நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக இருப்பின் அவருடைய எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம். நூலின் ஆசிரியர் விக்கிபீடியாவின் தரத்துக்கேற்ப குறிப்பிடத்தகுந்தவர் என எண்ணாமல், நூலின் ஆசிரியர் பொதுவில் மிகச் சிறப்பு பெற்றவர் எனவே அவருடைய வாழ்க்கையும் எழுத்துப்படைப்புகளும் பரவலாக பயிலப்படலாம் என்ற வகையில் கருத்தில் கொள்ளலாம்" எனக்கூறுகிறது. கவிஞர் கண்ணதாசன் தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தைப்பெற்றவர். எனவே இத்தகுதியின் கீழ் இவ்விருபதிவுகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன எனக் கருதுகிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 05:57, 2 பெப்ரவரி 2016 (UTC)

பார்க்க: பேச்சு:கண்ணதாசன் கவிதைகள் (நூல்) --AntanO 08:55, 2 பெப்ரவரி 2016 (UTC)