பேச்சு:கிரந்த ஒருங்குறி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவை ஒருங்குறி (யுனிகோடு) நிறுவனத்தால் தமிழ்மொழிக்கான எழுத்து வெளியில் சேர்த்துள்ள கிரந்த எழுத்துகள். இவற்றுள் ஒரு வரிசையை இங்கு நீங்கள் இடவில்லை. கீழ்க்காணும் வலைப்பக்கத்தில் புதிய "ஷகரம்" (श् ஈடான கிரந்த எழுத்து) ஒன்றையும் சேர்த்திருக்கிறார்கள். 0BB6 என்னும் வரிசையைப் பார்க்கவும்: http://www.unicode.org/versions/Unicode5.1.0/#Tamil_Named_Character_Sequences இந்த "ஷ" தமிழில் பொது வழக்கில் இல்லை! இதனை கிரந்தம் என்னும் பக்கத்திலும் காணலாம். இது தவிர கிரந்த எழுத்துக்கென தனியாக ஓர் எழுத்து வெளி ஒதுக்க இருக்கிறார்கள் அதில் க,ச,ட,த,ப ஆகிய ஐந்துக்கும் ஒவ்வொன்றுக்கும் 4 மாறுகை ஒலிப்புகள் (வர்கங்கள்) இருக்கும். சமசுக்கிருதம் போலவே எல்லா எழுத்துகளும் இருக்கும். இது இன்னும் முடிவாகவில்லை எனக் கருதுகிறேன், ஆனால் முன்மொழியப்பட்டுளது. --செல்வா 01:53, 28 மார்ச் 2009 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரந்த_ஒருங்குறி&oldid=357931" இலிருந்து மீள்விக்கப்பட்டது