பேச்சு:கிரகாம் ஃபோர்ட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இவருடைய முதற்பெயரை "கிராம்" (gram) என்பது போல ஒலிப்பார்கள். கிராம் என்றே எழுதலாம்.அதே போல ஃபோர்டு என்று எழுதினால் கடைசி ஒலிப்பு D வரும் (சிறு உயிரொலிப்பு தமிழில் இருந்தாலும் அதுவே அவர்கள் ஒலிப்பிலும் உண்டு ஆனால் அவர்கள் குறிப்பதில்லை). ஃபோர்ட் என்று எழுதினால் Fort (கோட்டை) என்று ஆகும். வேறு வழியில்லாமல் அப்படி ஆனால் கவலைப்பட முடியாது. ஆனால் ஃபோர்டு (Ford), ஃபோர்ட்டு (Fort) என்று வேறுபடுத்திக் காட்ட வழி இருக்கும் பொழுது சீராக அப்படி எழுதுவது நல்லது என்று நினைக்கின்றேன்.--செல்வா 11:54, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

உள்ளடக்கம்[தொகு]

இக்கட்டுரரயில் உள்ள உள்ளடக்கம் போதாது என்று கருதுகின்றேன். ஏன் இது ஒரு தனிக் கட்டுரையாக இருக்க வேண்டும் என்று புரியவில்லை. இப்படி உள்ள நூற்றுக்கணக்கான கட்டுரைகளை அட்டவணையில் இடலாமே.--செல்வா 11:57, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

உரிய கட்டுரைகளில் சிறுதிருத்தங்கள் செய்து கொண்டிருக்கின்றேன். முடிந்த பின்பு எதிர்வரும் மாதங்களில் ஆங்கிலவிக்கியில் உள்ளவற்றை மொழிபெயர்த்து விரிவாக்கம் செய்யவுள்ளேன்--P.M.Puniyameen 12:46, 27 சனவரி 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிரகாம்_ஃபோர்ட்&oldid=1003579" இலிருந்து மீள்விக்கப்பட்டது