பேச்சு:கிட்சால்குவாடலி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Winnan Tirunallur: சித்திரி » சித்திரம் என்பதுடன் ஒப்புநோக்குக. சித்திரித்தல் என்றே வரவேண்டும். --மதனாகரன் (பேச்சு) 18:20, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

சித்தரிப்பு என்பதாகவே விக்கிபீடியா கட்டுரை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சித்ரம் என்ற வடமொழி சொல்லே சித்திரம், சித்தரம் என தமிழாகியது, காட்சிப் படுத்தல், வரைதல் என்பதையே சித்திரிப்பு, சித்தரிப்பு என அழைக்கின்றனர். இரண்டு சொற்களும் பயன்பாட்டில் உள்ளது. இந்த இரண்டைவிட காட்சிப் படுத்தல் என்ற தமிழ்ச் சொல்லையே பயன்படுத்தலாம். --விண்ணன் (பேச்சு) 18:25, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

பிரச்சினை-பிரச்சனை என்பது போல் இச்சிக்கல் எழுந்துள்ளது. தொடக்கத்தில் எழுதியபடி, சித்தரித்தலே இருக்கட்டும். அல்லது காட்சிப்படுத்தல் என்று கூறுவதும் நன்றே. சித்திரித்தல் (அ) சித்தரித்தல் தமிழ்ச் சொல் என்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியில் சொற்பிறப்பியல் நெறிமுறைகளுடன் விளக்கப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 18:38, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

அதே அதே ! அதே போல சிலர் சித்தரிப்பு, சித்திரிப்பு தமிழ் சொல்லென்பார்கள். தமிழகராதிகள் சிலவும் அதையே முன்மொழிகின்றன. ஆனால், சித்தரிப்பு, சித்திரிப்பு என்பதை பகுத்து நோக்குகின்ற போது அதன் வேர்ச் சொற்களுக்கும் காட்சிப்படுத்தல் என்ற பொருளுக்கும் தொடர்புகள் குறைவாக, பொருள் பேதம் கூடுதலாக இருக்கின்றது. Chitra என்ற வடமொழி மூலமாக வந்த சித்திரம் என்ற சொல்லிலிருந்து உருவாகிய சொல்லாகவே நாம் இவற்றை நோக்க வேண்டியுள்ளது. ஆக, இதன் பின்னிலுள்ள கருத்து வேறுபாடுகளைக் கொண்டு காட்சிப் படுத்தப்பட்ட என்ற நல்ல தமிழ் சொல்லையே பயன்படுத்தலாம். நமக்குண்டான தமிழறிவு மிகக் குறைவாக இருப்பதால் சில குழப்பங்களுக்கு தமிழ் மொழி வல்லுநர்களே சரியான தீர்வை வழங்க வேண்டும். --விண்ணன் (பேச்சு) 18:52, 30 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கிட்சால்குவாடலி&oldid=1907276" இலிருந்து மீள்விக்கப்பட்டது