பேச்சு:கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

County என்பதை (மா)காணம், (மா)வட்டம், வளநாடு என்றவாறு ஏதோ ஒரு வகையில் தமிழ்ப்படுத்தலாமே. கவுன்ட்டி என்று எழுதுவதில் இலக்கணப் பிழையும் உள்ளதன்றோ.--பாஹிம் (பேச்சு) 05:20, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]

வணக்கம் பாஹிம் ! இந்தியாவில் மாகாணம் மாநிலத்திற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டம் மாநிலத்திற்கு கீழான நிர்வாகப் பிரிவு ஆகும். ஆனால் மாவட்டம் என்பது ஆங்கிலத்தில் district எனப்படுகிறது. countyக்கு தமிழ் கலைச்சொல் எதுவென்று தெரியாமலே ஒலிபெயர்ப்பாக எழுதினேன். பொருத்தமான கலைச்சொல் பரிந்துரைக்கப்பட்டால் தலைப்பை மாற்றுவதில் தடையேதும் இல்லை. ஆங்கில கவுன்ட்டி என்ற சொல் கவுன்ட் என்ற குறுமன்னர் ஆண்ட நிலம் என்பதிலிருந்து வந்துள்ளது. மற்ற விக்கிப்பீடியர்களும் பொருத்தமானப் பெயரை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.--மணியன் (பேச்சு) 08:15, 25 ஆகத்து 2014 (UTC)[பதிலளி]
வணக்கம். மன்னராட்சிக்கு உட்பட்ட நிலமாக இருப்பதால், கோநிலம் (கோ - அரசன்; நிலம் - பகுதி) அல்லது கோவூர் (கோ+ஊர்) என்ற வார்த்தைகளைப் பரிந்துரை செய்கிறேன். மேலும் Council - நகரசபை, Borough - பெருநகர் தொடர்பான வார்த்தைகளையும் உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன் செலின் ஜார்ஜ் (பேச்சு) 23:31, 26 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
வணக்கம், County என்பது மாநிலத்தின் உட்பிரிவான மாவட்டத்தின் உட்பிரிவான கோட்டத்தினைக் குறிக்கும் சொல்லாகும். சோழர் காலத்தில் பெருநாட்டை மண்டலங்களாகவும், மண்டலங்களைக் கோட்டங்களாகவும் பிரித்திருந்தனர். இன்றும் கூட தமிழகத்தில் வருவாய் கோட்டங்கள் என கோட்டங்கள் இருக்கின்றன. ஆனால் County என்ற சொல்லானது, சில நாடுகளில் வட்டங்களாகவும், சில நாடுகளில் ஒன்றியங்களாகவும், சில நாடுகளில் கோட்டங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் கோட்டம் என்ற சொல்லே சரியாக இருக்கும் என நான் கருதுகின்றேன். --அருணன் (பேச்சு) 17:01, 5 செப்டம்பர் 2015 (UTC)