பேச்சு:கருவால் பெருங்கொக்கு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு குறித்து கருத்து/தலைப்பை மாற்றப் பரிந்துரை[தொகு]

  • Common crane (Grus grus) -- கருவால் பெருங்கொக்கு என்று இக்கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது[1].
  • ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழாக்கம் செய்வது என்பது, கடைசி முயற்சியாகத்தான் இருக்க வேண்டும் (இப்பக்கத்தில் Eurasian crane என்பதன் தமிழாக்கமே ஐரோவாசியக் கொக்கு என்றானது) ; அதாவது, அனைத்துவிதத் தரவுகளிலும் (எ-டு: தரமான/களத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்கள், பிற ஊடகக் கட்டுரைகள், வட்டார வழக்குகள் உள்ளிட்டவை) அப்பறவைக்கான தமிழ்ப்பெயர் புழக்கத்தில் இல்லை என்று உறுதி செய்த பின்னரே. அதுவும், அப்பெயரைப் பரிந்துரைத்து விட்டு, அதற்கு எதிர்ப்பு அல்லது பிற வாதங்களைக் கேட்ட பின்னரே தமிழாக்கச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். [Lion-tailed macaque-ஐ சிங்கவால் குரங்கு என்று சொல்வது அபத்தம், ஏனெனில், அதற்கு சோலைமந்தி என்ற தமிழ்ச்சொல் புழக்கத்தில் உள்ளது]
  • எனவே, இக்கட்டுரையின் தலைப்பை கருவால் பெருங்கொக்கு என மாற்றப் பரிந்துரைக்கப்படுகிறது. --PARITHIMATHI (பேச்சு) 09:13, 25 ஏப்ரல் 2020 (UTC)
  • இந்த கையேடு எங்கு கிடைக்கும்? --Mereraj (பேச்சு)
  • இக்கையேட்டின் ISBN எண்ணைக் குறிப்பிட முடியுமா?. இது தற்போது BNHS-ன் Publications இணையதளத்தில் கிடைக்கவில்லை. --Mereraj (பேச்சு)

மேற்கோள்கள்[தொகு]

  1. ரிச்சர்ட் கிரமிட், டிம்  இன்ஸ்கிப் (2005) -- தமிழில் (கோ. மகேஷ்வரன்). தென் இந்திய பறவைகள்: பக். 90:5. A&C Black Publishers, London