பேச்சு:கருச்சிதைவு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருச்சிதைவு எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia
கருச்சிதைவு உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் கருச்சிதைவு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Autoimmune என்பது தமிழ் அகரமுதலியில் 'தன்னுடல் தாங்கு திறன்' என்று உள்ளது. 'தன்னுடல் தாங்கு திறன்' என்பதா, அல்லது 'தன்னுடல் தாக்கு திறன்' அல்லது 'தன்னுடல் எதிர்ப்பு' என்பதா சரியாக இருக்கும்?

Autoimmune disorder என்பதை நான் இங்கே 'தன்னுடல் எதிர்ப்பு குறைபாடு' என மொழிபெயர்த்திருந்தேன். தன் சொந்த உடலிலுள்ள உயிரணுக்கள், இழையங்களுக்கு எதிராகவே தொழிற்படக்கூடிய குறைபாடு என்பதால் அப்படிக் குறிப்பிட்டேன். மேலும் Immune system என்பதை 'நோய் எதிர்ப்பாற்றல் முறைமை' எனக் குறிப்பிட்டுள்ளோம்.

'தன்னுடல் எதிர்ப்பு குறைபாடு' என்பது சரியான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதா எனத் தெரியவில்லை. அது தவறானால், அதனை எப்படி குறிப்பிடலாம்? 'தன்னுடல் தாக்கு திறன் நோய்' என்று குறிப்பிடலாமா?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கருச்சிதைவு&oldid=1229449" இலிருந்து மீள்விக்கப்பட்டது