பேச்சு:கனகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது வைடூரியம் அல்ல. --Anton (பேச்சு) 17:26, 21 மே 2013 (UTC)[பதிலளி]

Cat's eye--Anton (பேச்சு) 00:14, 22 மே 2013 (UTC)[பதிலளி]

நாங்கள் வைடூரியம் எனக் குறிப்பிடுவது Chrysoberyll வகையைச் சேர்ந்த பூனைக் கண் கற்களையே. இந்தக் கட்டுரைத் தலைப்பு முற்றிலும் தவறு.--பாஹிம் (பேச்சு) 14:54, 19 சூன் 2014 (UTC)[பதிலளி]

பொன் வெள்ளைக் கல் என்று எதுவும் கிடையாது. சரியான தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--பாஹிம் (பேச்சு) 06:56, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

கனகம் என்பது இந்த இரத்தினம் என்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார் அன்ரன். இணையவழியில் ஆதாரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் இரத்தின வணிகன் என்ற அடிப்படையில், நான் இந்த வகை இரத்தினங்களை வாங்கியும் விற்றுமுள்ளேன். நான் முதன்முதலாகக் கனக மணியெடுத்து விற்பனை செய்தது இற்றைக்குப் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில். இதுதான் கனகம் என்பதற்கு ஆதாரம் தேவையென்றால் கொழும்புக்கோ வேருவளைக்கோ காலிக்கோ கண்டிக்கோ இரத்தினபுரிக்கோ சென்று இரத்தின வணிகர்களிடம் கேட்டால் இந்த வகை இரத்தினத்தைத்தான் காட்டுவார்கள்.--பாஹிம் (பேச்சு) 15:45, 19 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]

chrysoberyl என்பது கனகம் என்பதற்கான சான்று தேவை அல்லது சரியான பெயருக்கு நகர்த்த வேண்டும். இங்கு விக்கி நடைமுறைக்கேற்ப சான்று இணைக்க வேண்டும். தேவையற்ற பேச்சு வேண்டாம். @Ravidreams: சான்று கேட்டால், இதுதான் கனகம் என்பதற்கு ஆதாரம் தேவையென்றால் கொழும்புக்கோ வேருவளைக்கோ காலிக்கோ கண்டிக்கோ இரத்தினபுரிக்கோ சென்று இரத்தின வணிகர்களிடம் கேட்டால் இந்த வகை இரத்தினத்தைத்தான் காட்டுவார்கள். என்று பதில் கிடைக்கிறது. இதற்கு நீங்கள் எவ்வாறு பதில் அளிப்பீர்கள். இவ்வாறான பேச்சு தொடர்ந்தால் என்ன செய்யலாம். --AntanO (பேச்சு) 04:34, 20 அக்டோபர் 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனகம்&oldid=3050076" இலிருந்து மீள்விக்கப்பட்டது