பேச்சு:உலோகப் பிணைப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் முக்கிய கட்டுரைகளின் பட்டியலில் உலோகப் பிணைப்பு என்று உள்ளது. இலங்கையில் Metallic bond என்பதற்கு மின்வலுப் பிணைப்பு, அயன் பிணைப்பு ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். மின்வலுப் பிணைப்பு என்பதே பொருத்தமாகப் படுகிறது. ஆகவே, மின்வலுப் பிணைப்பு எனத் தலைப்பை மாற்றுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாஹரன் (பேச்சு) 13:07, 13 ஏப்ரல் 2012 (UTC)

மதனாஹரன், இந்தத் தலைப்புகள் இங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன. தவிர, விக்சனரியிலும் Metallic bond என்பதற்கு உலோகப் பிணைப்பு என்றே கொடுக்கப்பட்டுள்ளது (தமிழ் இணையப் பல்கலைக்கழக உசாத்துணையுடன்). தவிர Chemical bond கட்டுரையில் அயன் பிணைப்பிற்கும் உலோகப் பிணைப்பிற்கும் உள்ள வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. இருப்பினும் துறை சார்ந்த அறிஞர்கள் இதனை ஆராய்ந்து பொருத்தமான தலைப்பை இடுமாறு வேண்டுகிறேன்.
இதே பெயரில் கட்டுரை துவக்கப்பட்டாலும் இங்குள்ள உரையாடலின்படி தலைப்பை நகர்த்திக் கொள்ளலாம்.--மணியன் (பேச்சு) 15:35, 13 ஏப்ரல் 2012 (UTC)

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் கையாளப்படும் பெயரை இங்கேயும் கையாளலாம். --மதனாஹரன் (பேச்சு) 03:05, 14 ஏப்ரல் 2012 (UTC)

வித்தியாசத்தை அறிந்து கொண்டேன். நன்றிகள்! --மதனாகரன் (பேச்சு) 09:30, 1 மே 2012 (UTC)[பதிலளி]

உலோகம் என்பது தமிழ்ச் சொல் இல்லை! ஆகவே, மாழைப் பிணைப்பு என்று தலைப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். --மதனாகரன் (பேச்சு) 02:39, 5 மே 2012 (UTC)[பதிலளி]

அவ்வாறே தலைப்பிடலாம். --மணியன் (பேச்சு) 02:53, 5 மே 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உலோகப்_பிணைப்பு&oldid=1100973" இலிருந்து மீள்விக்கப்பட்டது