பேச்சு:ஆலோவீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கலோவீன் என்றாலே உச்சரிப்பு வருகிறது என்று நினைக்கிறேன். --Natkeeran 22:51, 16 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

கலோவீன் என்றால் kaloween என்பதாக பலுக்க வேண்டும். ஃகலோவீன் என்றால் Haloween என்று பலுக்க வேண்டும். ஆனால் ஆய்த எழுத்தில் தொடங்குதல் கூடாது என்னும் கருத்து இருப்பதால் எதிர்ப்பு இருக்கலாம். தமிழ் முறைப்படி ஆலோவீன் என்று கூறுவது சரியாக இருக்கும். Hanuman, Hari, Hara என்னும் சொற்கள் அனுமான் (அனுமன்), அரி, அரன் என்று எழுதும் வழக்கம் போல். ஆலோவீன் என்று எழுதலாம். இதே போலவே Harper என்னும் சொல்லும் ஆர்ப்பர் என்று எழுதுவது நல்லது. ஃகார்ப்பர் என்றால் ஒலிப்புத் துல்லியம் கிட்டும், ஆனால் தேவையா என எண்ணிப்பார்த்தல் வேண்டும்--செல்வா 00:09, 17 அக்டோபர் 2008 (UTC). எஃகு, அஃகுல்லி, அஃகுதல் ஆகிய சொற்களில் வரும் ஒலிப்பைப் பாருங்கள்.--செல்வா 00:11, 17 அக்டோபர் 2008 (UTC)[பதிலளி]

ஆலோவீன் என்று பெயர் மாற்றுவதில், நான் உடன்படுகிறேன்.த* உழவன் 11:56, 28 டிசம்பர் 2009 (UTC)

கூகுள் மொழிபெயர்ப்பு உரைத் திருத்தம் முடிந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆலோவீன்&oldid=1525243" இலிருந்து மீள்விக்கப்பட்டது