பேச்சு:அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதிய பதிவு தொடக்கம்[தொகு]

தற்போது இப்பள்ளியைப் பற்றிய புதிய பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களும், கூடுதல் விவரங்களும் பெறப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 11:29, 23 சூலை 2019 (UTC)[பதிலளி]

10 நவம்பர் 1919[தொகு]

நூற்றாண்டு விழா தொடர்பாகவும், அதற்கு முன்பாகவும் வந்த சில நாளிதழ் செய்திகளில் இப்பள்ளி 11 நவம்பர் 1919இல் திறந்துவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அண்மையில் முன்னாள் மாணவர் மூலமாகப் பெறப்பட்ட தினமலர் நாளிதழின் செய்தி மூலமாக அப்பள்ளி முதன் முதலாக 10 நவம்பர் 1919இல் திறந்துவைக்கப்பட்ட செய்தியும், பிற கூடுதல் செய்திகளும் உள்ளன. (இந்த தினமலர் நாளிதழ் செய்தியின் நாள் விவரம் செய்தி நறுக்கில் காணப்படவில்லை. ஆனால் தஞ்சைப்பதிப்பு என்பதைக் குறிக்கும் வகையில் தஞ்சை என்று உள்ளது. நாள் விவரம் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது). மேலும் ஒரு சான்றாக பள்ளியில் உள்ள, 10 NOV 19 என்று நாளிடப்பட்ட ஆங்கிலத்தில் உள்ள கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. வாய்ப்பிருக்கும்போது நான் படித்த இந்த பள்ளிக்கு நேரில் சென்று அக்கல்வெட்டினைப் புகைப்படம் எடுத்து பதிவோடு இணைப்பேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:37, 10 செப்டம்பர் 2019 (UTC)

14 செப்டம்பர் 2019 அன்று பள்ளிக்குச் சென்று, நூற்றாண்டு தொடர்பான 10 நவம்பர் 1919 கல்வெட்டையும், 31 அக்டோபர் 1955 நாளிட்ட மற்றொரு கல்வெட்டையும் நேரில் கண்டறிந்து, புகைப்படம் எடுத்து தற்போது பதிவில் சேர்த்துள்ளேன். கூடுதல் விவரங்கள் பெற்று பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:30, 18 செப்டம்பர் 2019 (UTC)