பேச்சு:அடோபி பிளாசு பிளேயர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சொல்லுக்கு முதலில் ஆய்த எழுத்து வர முடியாதென பேச்சு:தெமாகு பெரிய பள்ளிவாசல் பக்கத்திற் பார்க்கப்பட்டதல்லவா? அத்துடன் சொல்லின் இறுதியில் பகர மெய்யெழுத்து வரவும் முடியாது.--பாஹிம் (பேச்சு) 03:21, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

படைப்பாளர் சூழல்[தொகு]

@மதனாஹரன், Kanags, and AntanO:, படைப்பாளர் சூழல் என இக்கட்டுரையில் குறிப்பிடுவது என்ன? -- மாதவன்  ( பேச்சு  ) 15:07, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

@Maathavan: "Authoring environment"ஐயே அவ்வாறு குறிப்பிடுகின்றார். "Strictly speaking, Adobe Flash is the authoring environment and Flash Player is the virtual machine used to run the Flash files" என்பது "பொதுவாக சொன்னால், அடோப் ப்ளாஷ் முறையானது படைப்பாளர் சூழல் என்றும் ஃப்ளாஷ் ப்ளேயர் ஃப்ளாஷ் கோப்புகளை இயக்கும் இயந்திரங்களாகவும் கருதப்படுகிறது" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் தொடக்கத்திலிருந்தே எழுதி விடலாம் போல இருக்கிறது. விக்கியுலகின் மிகக்கடினமான பணியான கூகுள் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளைத் திருத்தும் பணியை மேற்கொள்வதற்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 15:16, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]
இக்கட்டுரைகளை பார்க்கும் பொழுதே தலை சுற்றுகிறது. :) தங்கள் குறிப்பிற்கு நன்றி அண்ணா. -- மாதவன்  ( பேச்சு  ) 15:24, 17 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]