பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
Association crest
தோற்றம் 1895
ஃபிஃபா இணைவு 1904
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் இணைவு 1954
தலைவர் François De Keersmaecker
இணையதளம் www.belgianfootball.be

பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் (Royal Belgian Football Association அல்லது KBVB) என்பது பெல்ஜியம் நாட்டில் கால்பந்து விளையாட்டை நிர்வகிக்கும் அமைப்பாகும். இதன் தலைமையகம் பிரசெல்சு நகரில் அமைந்துள்ளது.

பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கமானது ஆண்கள், மகளிர் மற்றும் இளையோருக்கான தேசிய கால்பந்து அணிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது.[1] மேலும் பெல்ஜியத்தின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்பினையும் இச்சங்கமே நிர்வகிக்கின்றது. அதன்கீழ் வருவன:

  • பெல்ஜிய தொழில்முறைக் கூட்டிணைவு
  • இரண்டாம்நிலைக் கூட்டிணைவு
  • மூன்றாம்நிலைக் கூட்டிணைவு
  • கழகங்களின் தகுதியேற்றம்-தகுதிகுறைப்பு
  • பிராந்திய கூட்டிணைவுகள்
  • பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கக் கோப்பை
  • பெல்ஜிய உன்னதக் கோப்பை
  • ஃபுட்சல் (ஐவர் கால்பந்து) போட்டிகள்
  • மகளிர் கால்பந்துப் போட்டிகள்

நெதர்லாந்து அரச கால்பந்துச் சங்கத்தோடு இணைந்து இருநாடுகளுக்கும் பொதுவான மகளிர் கூட்டிணைவை (பெநெ கூட்டிணைவு) நடத்துகின்றது.

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]