பென்சைல் அசிட்டேட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பென்சைல் அசிட்டேட்
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 140-11-4
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C6H5CH2OCOCH3
மோலார் நிறை 150.18 g/mol
அடர்த்தி 1.054 g/ml
உருகுநிலை

−51 °C, 222 K, -60 °F

கொதிநிலை

212 °C, 485 K, 414 °F

வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

பென்சைல் அசிட்டேட் (Benzyl acetate) ஒரு கரிமவேதிச் சேர்மம். இதன் மூலக்கூற்று வாய்பாடு C9H10O2. இவ் வாய்பாட்டை இப்பொருளின் அமைப்புக்கு ஏற்றவாறு C6H5CH2OOCCH3 என்றும் எழுதுவதுண்டு. பென்சைல் அசிட்டேட் என்னும் இவ் வேதிப்பொருள் பென்சைல் ஆல்க்கஃகாலும் அசிட்டிக் காடியும் பிணைந்து (பிணைவு வடிகை வழி) உருவாகும் ஓர் எசுத்தர். இது நிறமற்ற நீர்மம். பென்சைல் அசிட்டேட்டின் இன்னொரு பெயர் ஃவினைல்மெத்தைல் அசிட்டேட் (phenylmethyl acetate)[1].

பென்சைல் அசிட்டேட் இயற்கையில் மலர்களில் காணப்படுகின்றது. மல்லிகைப்பூ, இலாங்-இலாங் (ylang-ylang), தோபிரா (tobira) போன்ற மலர்களில் இருந்து பெறப்படும் அடிப்படையான எண்ணெயின் (நெய்யின்) முக்கிய உட்கூறு இந்த பென்சைல் அசிட்டேட். பென்சைல் அசிட்டேட் மல்லிகைப்பூவின் நறுமணம் போன்ற மனம் தரும் பொருள். ஆகவே இது நறுமண நீர்மங்களில் பயன்படுகின்றது.

பென்சைல் அசிட்டேட் ஆண் ஆர்க்கிட் ஈக்களுக்கு (orchid bee) ஈர்ப்புண்டாக்கும் பொருள்களுள் ஒன்று. இவ் ஈக்கள் தாம் தம் உடலில் உருவாக்கும் மணமிகளைச் (pheromone) செய்ய பென்சைல் அசிட்டேட் பயன்படுகின்றதாம், ஆகவே இவ் ஈக்களை ஈர்க்க அல்லது பிடிக்க இப்பொருள் பயன்படுகின்றது.[2],

நெகிழிகள் (பிளாசிட்டிக்குகள்), பிசின்கள் (ரெசின், resin), செல்லுலோசு அசிட்டேட், நைட்ரேட், எண்ணெய், வார்னிசுகள், மைகள், பளபளப்பூட்டிகள் முதலியவற்றின் கரைப்பானாகவும் பயன்படுகின்றது[3].


அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, 6th Edition
  2. Schiestl, F.P. & Roubik, D.W. (2004). "Odor Compound Detection in Male Euglossine Bees". Journal of Chemical Ecology 29: 253–257. doi:10.1023/A:1021932131526. 
  3. McGraw-Hill Dictionary of Scientific and Technical Terms, 6th Edition

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பென்சைல்_அசிட்டேட்&oldid=1353328" இருந்து மீள்விக்கப்பட்டது