பெண்ணிய வணிகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணிய வணிகங்கள் (Feminist businesses) என்பது பெண்ணிய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள ஆர்வலர்களால் நிறுவப்பட்டு பெண்ணிய இயக்க செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களைக் குறிக்கிறது. [1] பெண்ணிய புத்தகக் கடைகள், பெண்ணிய கடன் சங்கங்கள், பெண்ணிய அச்சகங்கள், மற்றும் பெண்ணிய உணவகங்கள் ஆகியவை சில குறிப்பிடத்தகுந்த உதாரணங்களாகும். [1] [2] இந்த வணிகங்கள் 1970, 1980 மற்றும் 1990 களில் பெண்ணியத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகளின் ஒரு பகுதியாக இருந்தன. [3] பெண்ணிய தொழில்முனைவோர் தங்கள் கொள்கைகளை முன்னெடுப்பதற்காக பெண்ணிய பொருளாதார கூட்டணி போன்ற அமைப்புகளை நிறுவினர். [3] பெண்ணிய தொழில்முனைவோர் மூன்று முக்கிய குறிக்கோள்களை நாடினர்: தங்கள் சித்தாந்தத்தை தங்கள் தொழில்கள் மூலம் பரப்புதல், பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், அவர்கள் ஆண்களை பொருளாதார ரீதியாக சார்ந்து இருக்காமல் சுய மேம்பாடு பெறுதல் ஆகிய ஆகும். [4] [2] தற்போதும் பெண்ணிய வணிகங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவை ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது குறிப்பாக பெண்கள் புத்தகக் கடைகள், 2000 ஆம் ஆண்டிலிருந்து எண்ணிக்கையில் மிகவும் குறைந்து காணப்படுகிறது. [1] [4] [2] [3]

இவற்றில் பல முதன்மையாக இலாப நோக்கத்திற்காக அல்லது சேவையை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது. பெண்ணிய சுகாதார மையங்கள், கூட்டாக இயங்குகின்றன, அகனள் மதுக்கடைகள் மற்றும் மியூசிக் ஆஃப் தெ 1970 பெண்ணியவாதி வணிகர்கள் சந்திப்பதற்கு வழிவகுத்தது.

பெண்ணிய புத்தகக் கடைகள்[தொகு]

பழமையான பெண்ணிய புத்தகக் கடைகளில் ஒன்றான, ஆன்டிகோன் புத்தகங்கள்.

பெண்ணிய புத்தகக் கடைகள் இரண்டாம் அலை பெண்ணிய இயக்கத்தின் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றின.[5] 1983 இல் வட அமெரிக்காவில் சுமார் 100 புத்தகக் கடைகள் இருந்தன, இது ஆண்டுதோறும் $ 400 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையினை எட்டியது. [6] 21 ஆம் நூற்றாண்டில் சுயாதீன புத்தகக் கடைகள் [7] மற்றும் 2016 இல் 20 க்கும் குறைவான பெண்ணிய புத்தகக் கடைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. அரிசோனா, டக்சோனில் உள்ள ஆன்டிகோன் புக்ஸ் நிறுவனம் தான் தற்போது உள்ள பெண்ணியவாதிய வணிகக் கடைகளில் உள்ள பழமையான புத்தக கடை ஆகும்.[2] 13 புத்தகக் கடைகள் பெண்ணிய கருத்துக்களைப் பரப்புவதற்கும், கோணல் கோட்பாடுகள், விலங்கு உரிமைகள், அகனள் புனைகதை, ஓரின சேர்க்கை ஆய்வுகள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய தகவல்களைப் பற்றிய புத்தகங்களை சிற்பனை செய்வதற்கும் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. [2]

அமேசான் புத்தகக் கடை மற்றும் சில்வர் மூன் புத்தகக் கடை உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கடைகளில் இவர்களது வணிகம் நடைபெறுகிறது.

பெண்ணிய உணவகங்கள்[தொகு]

பெண்ணிய உணவகங்களின் ஆரம்ப வடிவம் வாக்குரிமை உணவகங்கள், தேநீர் அறைகள் அல்லது மதிய உணவு அறைகளாக இருந்தது. [8] இங்கு ஐந்து அல்லது பத்து செண்டுகள் எனும் குறைந்த விலையில் உணவு விற்கப்பட்டது. மேலும் அங்கு ஆண்கள் சாப்பிடவும் அனுமதிக்கப்பட்டனர். [8] இருந்த போதிலும் இந்த உணவகங்கள் தங்களது நிறுவனர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் ஏற்பட்ட மோதல்களால் வணிகம் பாதிக்கப்பட்டன. [8] 1910 களில் இருந்த வாக்குரிமை உணவகங்கள் 1970 களில் பெண்ணிய உணவகங்கள் உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தன. [8]

ஏப்ரல் 1972 இல், முதல் பெண்ணிய உணவகம், மதர் கரேஜ், நியூயார்க்கில் டோலோரஸ் அலெக்சாண்டரால் நிறுவப்பட்டது. ப்ளட்ரூட் எனும் சைவ பெண்ணிய உணவகம் மற்றும் புத்தகக் கடையானது 1977 முதல் கனெக்டிகட்டின் பிரிட்ஜ்போர்டில் செயல்பட்டு வருகிறது. [9]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Echols, Alice (1989). Daring to be Bad: Radical Feminism in America, 1967-1975. University of Minnesota Press. பக். 269–278, 357, 405–406. https://www.upress.umn.edu/book-division/books/daring-to-be-bad. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Hogan, Kristen (2016). The Feminist Bookstore Movement: Lesbian Antiracism and Feminist Accountability. Duke University Press. https://archive.org/details/feministbookstor0000hoga. 
  3. 3.0 3.1 3.2 Enke, Anne (2007). Finding the Movement: Sexuality, Contested Space, and Feminist Activism. Duke University Press. பக். 1–104. https://archive.org/details/findingmovements0000enke. 
  4. 4.0 4.1 Davis, Joshua (2017). From Head Shops to Whole Foods: The Rise and Fall of Activist Entrepreneurs. Columbia University Press. பக். 129–175. https://cup.columbia.edu/book/from-head-shops-to-whole-foods/9780231171588. 
  5. "Business Feminism - Los Angeles Review of Books" (in en-US). Los Angeles Review of Books. https://lareviewofbooks.org/article/business-feminism/#!. 
  6. . 
  7. "Brick and Mortar: Lessons About the Future of Bookselling | Harvard Political Review". harvardpolitics.com (in ஆங்கிலம்). Archived from the original on 2018-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-04.
  8. 8.0 8.1 8.2 8.3 "Women's restaurants". Restaurant-ing through history. http://www.thefeministrestaurantproject.com/. 
  9. Meyers, Joe (November 20, 2016). "Famed Bridgeport vegetarian restaurant approaches 40th anniversary". Connecticut Post. பார்க்கப்பட்ட நாள் 2019-05-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணிய_வணிகம்&oldid=3582099" இலிருந்து மீள்விக்கப்பட்டது