பெசாவர் மத்திய சிறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெசாவர் மத்திய சிறை (Central Prison Peshawar) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பெசாவரில் உள்ள ஒரு சிறைச்சாலையாகும். [1] [2] இந்த சிறைச்சாலை பெசாவர் நகரத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் கைபர் பக்துன்வா மாகாண சட்டமன்றம் போன்ற முக்கியமான கட்டிடங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. [3]

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்[தொகு]

2014 பெசாவர் பள்ளி படுகொலைக்குப் பிறகு தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க மேலும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சிறை வளாகத்தை சுற்றி ஒரு இரும்பு சுவர் கட்டப்பட்டது. பாதுகாப்பை பலப்படுத்த உயரடுக்கு இராணுவ படைகள் அழைக்கப்பட்டன. போலி தடுப்பூசி பிரச்சாரத்தின் மூலம் ஒசாமா பின்லேடனை கண்டுபிடிக்க மத்திய உளவுத்துறைக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் சகில் அப்ரிடி மற்றும் தெரீக்-இ-நஃபாசு-இ-சரியத்-இ-முகமதி குழுவின் தலைமை மதகுரு சூஃபி முஹம்மது உட்பட முக்கிய கைதிகள் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்தனர். இவர் தெரீக்-இ-நஃபாசு-இ-சரியத்-இ-முகமதி குழுவின் தாலிபான் தலைவர் மவுலானா பசுலுல்லாவின் சட்ட விரோதமான மாமனார் ஆவார். [4]

கபாப் கடை சம்பவம்[தொகு]

முழுமையாக செயல்பட்டுக் கொண்டிருந்த கபாப் கடை ஒன்று சியோ செய்திகள் தொலைக்காட்சியால் அம்பலமானது. சிறையின் மிக முக்கியமான பகுதியில் ஒரு கபாப் கடை எப்படி இயங்குகிறது என்பதை விசாரிக்க பெசாவர் காவல்துறை கைபர் பக்துன்வா உள் பாதுகாப்பு அமைப்பிற்கு கடிதம் எழுதியது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pakistan Criminal Records". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
  2. Superintendents, doctor of Peshawar prison suspended over militants’ escape
  3. Peshawar Central Jail on Wikimapia
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-09-29. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
  5. http://www.geo.tv/article-171576-Kebab-shop-operating-at-Central-Jail-Peshawar-shut-down

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசாவர்_மத்திய_சிறை&oldid=3564744" இலிருந்து மீள்விக்கப்பட்டது