பூவை அமுதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவை அமுதன் (Poovai Amuthan, செப்டம்பர் 6, 1932 - மே 20, 2017[1]) சிறுவர்க்கான[2] பாடல்கள், கதைகள் எழுதிப் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர். இவரது இயற்பெயர் சி. ர. கோவிந்தராசன் ஆகும். சிறுகதை, புதினம், கட்டுரை எனப் பலவற்றையும் படைத்துள்ளார்.

பிறப்பு[தொகு]

தமிழ்நாடு, செங்கற்பட்டு வட்டம் சிக்கராயபுரத்தில் செப்டம்பர் 6, 1932 இல் பிறந்தார். இவரது பெற்றோர் அரங்கநாதன்-காமாட்சியம்மாள் ஆவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

படைப்புகள்[தொகு]

  1. அழகு மலர் (கவிதை)
  2. கவி முரசு
  3. புலரும் பொழுது
  4. உள்ளக்கடலின் உணர்வலைகள்
  5. விழுந்ததும் எழுந்ததும்
  6. உறவைத் தேடும் பறவை (நாவல்)
  7. மராட்டிய மறவன் (நாவல்)
  8. அரிச்சந்திரன் கதை
  9. சிந்தனையாளர் சாக்ரடீஸ்
  10. மாவீரன் நெப்போலியன்
  11. நிலாப்படகு
  12. நல்ல நல்ல பாடல்கள்
  13. திருக்குறள்- தெளிவுரை

சிறப்புகள்[தொகு]

இவர் இயற்றிய 600 பாடல்கள் இசைக் கலைஞர்கள் பலரால் பாடப்பெற்று 60 ஒலி நாடாக்களாக வெளிவந்துள்ளன. திராவிடன்எனும் வார இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். முற்போக்குச் சிந்தனை எழுத்தாளராகத் திகழ்ந்தார். இவரது படைப்புகளுள் சில கல்லூரி, பல்கலைக் கழகங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன. இவர் எழுதிய நல்ல உள்ளம் எனும் உளவியல் நூலுக்குத் தமிழக அரசு பரிசளித்துச் சிறப்பித்துள்ளது.[3]இலக்கிய அமைப்புகள், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் வாயிலாகவும் இவர் படைப்புகள் பாராட்டும் பரிசும் பெற்றுள்ளன.

விருதுகள்[தொகு]

  • திருக்குறள் உரைச் செம்மல்
  • வள்ளியப்பா இலக்கிய விருது
  • குழந்தை இலக்கிய மாமணி
  • கண்ணதாசன் விருது
  • கவிமாமணி
  • பாரதி பணிச்செல்வர்
  • கவிஞர் திலகம்
  • சாதனையாளர் விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. காலமானார் கவிஞர் பூவை அமுதன், தினமணி நாளிதழ்
  2. "மேதைகளை வாசிப்போம்: வாசிக்க வேண்டிய சிறார் எழுத்தாளர்கள்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
  3. கவிமாமணி பூவை அமுதன் கவிதைகள்-சந்தர் சுப்பிரமணியன்
  • ப.முத்துக்குமாரசுவாமி- இருபதாம் நூற்றாண்டின் 100 தமிழ்க் கவிஞர்கள்- பழனியப்பா பிரதர்ஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூவை_அமுதன்&oldid=3724209" இலிருந்து மீள்விக்கப்பட்டது