புதுக்கோட்டை மனோன்மணியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு மனோன்மணியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:புதுக்கோட்டை
அமைவிடம்:கீழ ராஜ வீதி, புதுக்கோட்டை, புதுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:புதுக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திருச்சிராப்பள்ளி
கோயில் தகவல்
தாயார்:மனோன்மணீ அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி, ஒன்பதாம் நாள்
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

புதுக்கோட்டை மனோன்மணியம்மன் கோயில் (Manonmani Amman Temple) தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1] புதுக்கோட்டை கீழ ராச வீதியில் உள்ள மனோன்மணி அம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. மனோன்மணி அம்மன் கோயில் அறக்கட்டளை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நவராத்திரி விழாவாக நடைபெறுகிறது. விழாவில் தினசரி பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும் அடுத்த மூன்று நாட்கள் சரசுவதிக்கும் கடைசி மூன்று நாள் இலட்சுமிக்காகவும் என ஒன்பது நாட்கள் மூன்று தெய்வங்களையும் வழிபடக்கூடிய சிறப்புடன் நவராத்திரி விழா நடத்தப்படுகிறது.[2]

வரலாறு[தொகு]

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் மனோன்மணீ அம்மன் சன்னதியும், 1) முருகன் 2) விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி, ஐப்பசி மாதம் நவராத்திரி, ஒன்பதாம் நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மனோன்மணி அம்மன் கோயிலில் கோலாகலமாக தொடங்கியது நவராத்திரி விழா..!". News18 Tamil. 2022-09-27. பார்க்கப்பட்ட நாள் 2023-05-22.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)