பீபாடி இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்மியமுசியம் எனப்படும் சுவீடப் படை அருங்காட்சியகத்தின், பீபாடி புரிதுமுக்கிகள்.  
சுவிட்சர்லாந்தின், மோர்ஜ்ஷ் மாவட்டத்தில் உள்ள, 'வோ மக்களின் இராணுவ அருங்காட்சியகத்தில்' காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும், பீபாடி புரிதுமுக்கி, ரகம் 1867, .41-கேல் (10.4 மிமீ) சுவிஸ். 

பீபாடி இயக்கம் என்பது, ஒரு ஆரம்பநிலையில் இருந்த பின்குண்டேற்ற சுடுகலனின் இயங்குநுட்ப  வடிவம் ஆகும். இதில், பின்னால் கீல் இடப்பட்ட, வீழும்-அடைப்பு வடிவமைப்பை கொண்ட அடைப்பு இருக்கும்; இந்த கீலை மையமாகக் கொண்டு அடைப்பு சுழற்றப்பட்டு, அதன் முன்பகுதியை தாழ்த்துவதன் மூலம், குழலாசனம் திறக்கப்பட்டு, குண்டேற்றப்படும். பீபாடி இயக்கம் பெரும்பாலும் வெளிப்புற சுத்தியலை பிரயோகித்து தான் வெடிபொதியை வெடிக்கச் செய்யும்.

பீபாடி இயக்கம் 

மாசச்சூசெட்ஸ்ஸின் தலைநகரான பாஸ்டன்னை சேர்ந்த, ஹென்றி ஒ. பீபாடி வடிவமைத்தது தான் பீபாடி இயக்கம். சூலை 22, 1862-ல் இதற்கு முதல் காப்புரிமம் பெறப்பட்டது.

சுவிஸ் துமுக்கிக்கொல்லர், ஃபிரெடெரிக் வான் மார்ட்டினி என்பவர், பீபாடி இயக்கத்தை ஒத்தவாறு ஒரு இயக்கமுறையை உருவாக்கினார், அது உட்புற சுத்தியல் கொண்டிருந்தது. அலெக்சாண்டர் ஹென்றி என்பவரால் வடிவமைக்கப்பட்ட புரியை கொண்டிருந்த குழலுடன், இது இணைக்கப்பட்டு உருவான, 1871 மார்ட்டினி-ஹென்றி புரிதுமுக்கி பிரித்தானிய படைகளின் பிரதான துப்பாக்கியாக இருபது வருடங்களுக்கு திகழ்ந்தது. 

புற இணைப்புகள் [தொகு]

நூலடைவு[தொகு]

  • Flayderman, Norm (2001), Flayderman's Guide to Antique American Firearms... and their values, Iola, WI, USA: Krause Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87349-313-3. {{citation}}: Invalid |ref=harv (help); More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபாடி_இயக்கம்&oldid=3360503" இலிருந்து மீள்விக்கப்பட்டது