பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் (இவர் பி. டி. லீ. செங்கவராய நாயகர் என்றும் அழைக்கபடுகிறார், Chengalvaraya Naicker) (1829-1874[1]) என்பவர் ஒரு வள்ளலாவார். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி என்னும் சிற்றூரில் வளர்ந்தவர். இவர் சென்னை இராணுவத்தில் துபாசியாகப் (மொழிபெயர்ப்பாளர்) பணிபுரிந்தார். இவர் தன் சொந்த சம்பாத்தியத்தில் சேர்த்த சொத்துகள் மூலம் ஏழைகள், அனாதைக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் பல சமுதாய சேவைகளைச் செய்தவராவார்.

அறப்பணிகள்[தொகு]

செங்கல்வ நாயக்கர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்குத் தனி ஒரு ஆளாக நின்று பல இலட்சம் மதிப்புள்ள உதவிப்பொருட்களை தன் சொந்தச் செலவில் அனுப்பினார். இது போன்ற பல அறப்பணிகளைச் செய்துள்ளார்.

செங்கல்வ நாயக்கர் தனது சொத்துக்கள் அனைத்தையும் உயில் மூலம் எழுதி அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார்.[2]. இதன் மூலம் வள்ளல் பி. டி. லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, வேப்பேரி,சென்னை-7 என்ற முகவரியில் கடந்த 145 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இவ்வறக்கட்டளை மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களான, மருத்துவம், தொழிற்கல்வி, பொறியியற்கல்வி போன்ற கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதில் ஏழை, எளிய மக்கள் பயன் பெறும்வகையில் செயல்பட்டு வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. V. Tiruvenkataswami, தொகுப்பாசிரியர் (1942). Centenary Commemoration Book, 1842-1942. Pachaiyappa's College, Madras. பக். 62. https://books.google.co.in/books?id=6s2gAAAAMAAJ. "P. T. Lee Chengalvaraya Naicker ( 1829-74 ) was the son of Peroomall Naicker , who was employed in the Madras Army" 
  2. "செங்கல்வராய அறக்கட்டளைத் தலைவராக நீதிபதி ஏ.கே.ராஜன் நியமனம்". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. சிந்தனையாளன் (இதழ்) பக் 49,சூலை 2015