பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர். இவர் அழகிய மணவாளதாசர் எனவும் அழைக்கப்பட்டார். தெய்வக்கவிஞர் என்று பொருள்படும் ‘திவ்வியகவி’ என்ற பெயராலும் இவரை அழைத்தனர். இவர் இயற்றிய எட்டு நூல்களின் தொகுதியை அஷ்டபிரபந்தம் எனக் கூறுவார். “அஷ்டபிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்“ என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வைப் புலப்படுத்தும். இவரது பாடல்கள் சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடை நோக்கும் நடைநோக்கும் கொண்டு ஒளிர்கின்றன. கி.பி. 1623 முதல் 1659 வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்க மன்னரின் அவையில் ஓர் அலுவலராய் அமர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த இவர் பின்னர் இறைத்தொண்டில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.