பிரீத்து குப்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீத்து குப்தா
Prithu Gupta
நாடுஇந்தியா
பிறப்புமார்ச்சு 8, 2004
பட்டம்கிராண்டுமாசுட்டர்
பிடே தரவுகோள்2444
உச்சத் தரவுகோள்2493

பிரீத்து குப்தா (Prithu Gupta) இந்தியாவின் தில்லி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார்.[1] 2019 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 வயது 4 மாதங்கள் வயதை தொட்டபோது இவர் இந்த மைல்கல்லை முதன்முதலில் எட்டினார். குப்தா ஒன்பது வயதாக இருந்தபோது சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். இது மற்ற கிராண்ட்மாசுடர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் தாமதமான தொடக்கம்தான்.

தொழில்[தொகு]

2013 ஆம் ஆண்டு அக்டோபரில் 1,187 என்ற பன்னாட்டு தரப்புள்ளிகளில் தொடங்கி, [2] பிரீத்து குறைந்த எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய போதிலும், ஆறு வருடங்களுக்கும் குறைவான போட்டிகளில் 2,500 புள்ளிகளைக் கடந்தார். அதிகப் போட்டிகளில் கலந்து கொள்வதற்குப் பதிலாக சிறந்த வீரர்கள் கலந்து கொள்ளும் சிறந்த தரவரிசை போட்டி நிகழ்வுகளில் கவனம் செலுத்தினார்.

2017 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பிரீத்து குப்தா செர்பியா நாட்டின் வெலிகோ கிராடிசுடே நகரில் நடைபெற்ற சில்வர் லேக் சதுரங்கப் போட்டியில் தனது முதல் பன்னாட்டு மாசுட்டர் நெறியை [3] அடைந்தார், மேலும் ஒரு மாதத்திற்குப் பிறகு செக் குடியரசில் நடந்த கோல்டன் பிராக் சதுரங்க விழாவில் தனது இரண்டாவது பன்னாட்டு மாசுட்டர் நெறியை அடைந்தார். தொடர் சுழல்முறை போட்டி நிகழ்வில் இவர் தனது ஒன்பது போட்டிகளில் ஏழில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார். 2,300 பன்னாட்டு தரப்புள்ளிகளையும் கடந்தார்.

2018 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் கிப்ரால்டரில் நடைபெற்ற மாசுட்டர் சதுரங்கப் போட்டியில் [4] பிரீத்து பன்னாட்டு மாசுட்டர் பட்டத்தை வென்று தனது முதல் கிராண்ட்மாசுட்டர் நெறியை அடைந்தார். [5] பின்னர், பால்மா டா மல்லோர்கா 7 ஆவது சதுரங்கப் போட்டியில் 4 ஆவது இடம் பிடித்து [6] பிரீத்து தனது இரண்டாவது கிராண்டுமாசுட்டர் நெறியைப் பெற்றார்.[7] 2018 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் பைல் பன்னாட்டு சதுரங்க விழாவில் இந்நிகழ்வு நடைபெற்றது.

2018 ஆம் ஆண்டு சூலை மாதத்திலேயே போர்டோவில் நடந்த போர்த்துகீசிய சதுரங்கப் போட்டியின் குழு நிகழ்வில் பிரீத்து குப்தா சிறந்த மரியாதையைப் பெற்றார். அதே ஆண்டு அக்டோபரில் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் இரண்டாவது சிறந்த இளம் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு சூலை மாதம் தனது 15 வயது மூன்று மாதத்தில் ஐசுலாந்து நாட்டின் ரெய்க்சாவிக் நகரத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, கோர்சிகாவில் நடந்த போர்டிசியோ போட்டியில் பிரீத்து குப்தா தனது மூன்றாவது கிராண்டுமாசுட்டர் நெறியைப் பெற்றார். இப்போட்டியில் இவருக்கு ஒன்பதாவது இடம் கிடைத்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு போர்ச்சுகல் போட்டியின்போது இந்தியாவின் 64 ஆவது கிராண்டுமாசுட்டர் என்ற தகுதியைப் பெற்றார். ஐந்தாவது சுற்றில் செருமன் நாட்டின் யாங்கெலிவிச்சிற்கு எதிரான போட்டியை வென்ற பிறகு, பிரீத்து 2,500 தரப் புள்ளிகளைக் கடந்தார்.

இவரது சாதனைகளுக்காகவும், முக்கியமான மூன்றாவது கிராண்டுமாசுட்டர் நெறியை எட்டியதற்காகவும், 2,500 தரப் புள்ளிகளைத் தாண்டி தனது கிராண்டுமாசுட்டர் தகுதியை உறுதிப்படுத்தியதற்காகவும், பிரீத்துவுக்கு 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் சொந்த மாநிலமான அரியானா அரசாங்கத்தால் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான மாநில விருது வழங்கப்பட்டது. 2020 சனவரியில் பால புரசுகார் விருதும் வழங்கப்பட்டது [8] 18 வயதுக்குட்பட்ட இந்தியர்களுக்கு விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பான முயற்சிகளுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

சாதனைகள்[தொகு]

2017: முதல் பன்னாட்டு மாசுட்டர் விதிமுறை, சில்வர் லேக் ஓபன், செர்பியா

2017: கோல்டன் பிராக் சதுரங்கத் திருவிழா, முதலிடம்

2017: 2 ஆவது பன்னாட்டு மாசுட்டர் விதிமுறை, கோல்டன் பிராக் சதுரங்கத் திருவிழா

2018: மூன்றாம் பன்னாட்டு மாசுட்டர் விதிமுறை, சர்வதேச மாசுட்டர் பட்டம், கிப்ரால்டர் மாசுட்டர் போட்டியில் கிப்ரால்டர் பட்டத்தை வென்றார்

2018: 1 ஆவது கிராண்டுமாசுட்டர் விதிமுறை, கிப்ரால்டர் மாசுட்டர் சதுரங்கப் போட்டி

2018: 2 ஆவது கிராண்டுமாசுட்டர் விதிமுறை, பைல் பன்னாட்டு சதுரங்கத் திருவிழா, சுவிட்சர்லாந்து

2018: முதலிடம், குழு நிகழ்வு, போர்த்துகீசிய அணி போட்டி

2019: மூன்றாவது மற்றும் இறுதி கிராண்டுமாசுட்டர் விதிமுறை நெறியை அடைந்தார். போர்டிசியோ சதுரங்கப் போட்டி, கோர்சிகா

2019: இந்தியாவின் 64 ஆவது கிராண்டுமாசுட்டர் தகுதியை பெற்றார். போர்ச்சுகல் சதுரங்கப் போட்டி, எவோரா, போர்ச்சுகல்

2020: பால புரசுகார் விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "சதுரங்க ராஜாக்கள்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/18/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3283276.html. பார்த்த நாள்: 3 February 2022. 
  2. "From 1187 to 2219 in just three years - ChessBase India". www.chessbase.in. 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  3. "13-year-old Prithu Gupta makes his maiden IM norm - ChessBase India". www.chessbase.in. 2017-07-02. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  4. "Gibraltar 2018: Prithu Gupta becomes an IM and scores his maiden GM norm - ChessBase India". www.chessbase.in. 2018-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  5. "Prithu Gupta- IM title and one GM Norm at the age of 13! - ChessBase India". www.chessbase.in. 2018-02-10. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  6. "Swayams Mishra and Prithu Gupta shine at the Llucmajor Open 2018 in Mallorca - ChessBase India". www.chessbase.in. 2018-05-24. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  7. "Prithu Gupta - the boy who tops in class and scores GM norms with ease! - ChessBase India". www.chessbase.in. 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
  8. "Ministry of Women and Child Development". nca-wcd.nic.in. Archived from the original on 2022-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-02-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீத்து_குப்தா&oldid=3780208" இலிருந்து மீள்விக்கப்பட்டது