பிரியா காம்ப்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரியா காம்ப்ளி (Priya Kambli) இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர் ஆவார்.[1] 1975 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

அமெரிக்க மாநிலமான லூசியானாவின் லஃபாயெட்டு நகரத்திலுள்ள லூசியானா பல்கலைக்கழகத்தில் நுண்கலை படிப்பில் இளங்கலை பட்டமும், அமெரிக்காவின் இயூசுட்டன் பல்கலைக்கழகத்தில் நுண்கலை படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.[2]

தொழில்[தொகு]

இயூசுட்டன் நுண்கலைகள் அருங்காட்சியகம்,[3] லைட் ஒர்க் புகைப்பட மையம்[2] மற்றும் தற்கால புகைப்பட அருங்காட்சியகம்[1] ஆகியவற்றில் பிரியா காம்ப்ளியின் படைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

காம்ப்ளி அமெரிக்க மாநிலமான மிசூரி மாநிலத்தில் உள்ள துரூமன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் கலைப் பேராசிரியராக பணியில் உள்ளார்.[2] இந்நகரத்தின் கன்சாசு நகரத்திலும் கன்சாசு நகர கலைஞர்கள் கூட்டணி என்ற இலாப நோக்கற்ற அமைப்பிலும் இவரது படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Priya Kambli | Museum of Contemporary Photography". www.mocp.org.
  2. 2.0 2.1 2.2 "Light Work Collection / Artwork / Me (Flour) [3702]". collection.lightwork.org.
  3. "Priya Kambli: Kavi (Silver Chumcha)". mfah.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியா_காம்ப்ளி&oldid=3755322" இலிருந்து மீள்விக்கப்பட்டது