பிரிதிபால் சிங் மைனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிதிபால் சிங் மைனி
Prithipal Singh Maini
பிறப்புபஞ்சாப், இந்தியா
பணிஎலும்பியல் அறுவை சிகிச்சை வல்லுநர்
அறியப்படுவதுஎலும்பு வெட்டு இணைப்பு
வாழ்க்கைத்
துணை
மருத்துவர்
விருதுகள்பத்ம பூசண்
நிசான்-இ-கல்சாவின் உத்தரவு

பிரிதிபால் சிங் மைனி (Prithipal Singh Maini) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். புது தில்லி சர் கங்கா ராம் சிட்டி மருத்துவமனையில் மூத்த ஆலோசகராகவும் அறுவை சிகிச்சை நிபுணராகவு பணியில் உள்ளார். [1] புது தில்லியில் உள்ள சாமா மருத்துவமனையில் எலும்பியல் நிபுணர் ஆலோசகராகவும் உள்ளார். [2]

பிரிதிபால் சிங் மைனி பல்வேறு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை முயற்சிகளை நிர்வகித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல மருத்துவப் பள்ளிகளில் கற்பித்தும் உள்ளார். [3] மகரிசி தயானந்த் பல்கலைக்கழகத்தின் கௌரவ

பேராசிரியராகவும், மலிவு விலையில் சுகாதார சேவையை ஊக்குவிக்கும் அமைப்பான பாத்ஃபைண்டர் சுகாதார இந்தியா குழுமத்தின் [4] துணைத் தலைவராகவும் உள்ளார். [5] 2001 ஆம் ஆண்டு பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாசு சிங் பாதல் வீழ்ச்சியடைந்தபோது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்து தொடை எலும்பு முறிவை சரிசெய்தவர் பிரிதிபால் சிங் மைனி என்பது குறிப்பிடத்தக்கதாகும். [6] 2001 ஆம் ஆண்டில் பஞ்சாப் முதல்வரிடமிருந்து நிசான்-இ-கல்சா கௌரவத்தைப் பெற்றார் [7] [8] இந்திய மருத்துவத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2007 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு மூன்றாவது உயரிய குடிமக்கள் விருதான பத்ம பூசன் விருதை வழங்கியது. [9]

மருத்துவர் பிரிதிபால் சிங் மைனி 27 மார்ச் 2023 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 27 ஆம் தேதியன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Department of Orthopedics". SGR City Hospital. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  2. "Dr. PS Maini on Practo". Practo. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  3. "Dr. Prithipal Singh Maini, Director". India Mart. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  4. "Executive Profile". Bloomberg. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  5. "Pathfinder Health India launches First Family Medical Centre". Pathfinder. 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  6. "Badal operated upon". The Tribune. 21 November 2001. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  7. "Order of Nishan-e-Khalsa winners". The Tribune. 14 April 2001. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  8. Punjab 2000: Political and Socio-economic Developments. Anamika Publishers & Distributors. 1 January 2001. https://books.google.com/books?id=1ZNgVkbUtagC&pg=PA258. 
  9. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிதிபால்_சிங்_மைனி&oldid=3770697" இலிருந்து மீள்விக்கப்பட்டது