பிராங்கோலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராங்கோலைட்டு
Francolite
உருசியாவில் கிடைத்த பிராங்கோலைட்டு
பொதுவானாவை
வகைபாசுபேட்டு கனிமம்
வேதி வாய்பாடு(Ca,Mg,Sr,Na)10(PO4,SO4,CO3)6F2−3

பிராங்கோலைட்டு (Francolite) என்பது (Ca,Mg,Sr,Na)10(PO4,SO4,CO3)6F2−3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். புளோர் அபடைட்டு கனிமத்தில் கார்பனேட்டு அதிகம் கலந்துள்ள வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது[1]. பாசுப்போரைட்டு எனப்படும் படிவுப் பாறைகளில் பிராங்கோலைட்டு காணப்படுகிறது. பல்வேறு தனிமங்களின் வேதிச் சேர்க்கைகள் இக்கனிமத்தின் உட்கூறுகளாக உள்ளன[2]. இங்கிலாந்து நாட்டின் தேவோன் மாகாணத்திலுள்ள டாவிசுடாக் மாவட்டத்தில் வீல் பிராங்கோ என்ற இடத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது[1].


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.mindat.org/min-4910.html Mindat.org
  2. R. A. Benmore, M. L. Coleman, and J. M. McArthur, Origin of is sedimentary francolite from its sulphur and carbon isotope composition. Nature 302: 516, 1983 [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்கோலைட்டு&oldid=2939607" இலிருந்து மீள்விக்கப்பட்டது